உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும்; கணித்தார் ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன்!

இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும்; கணித்தார் ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன்!

புதுடில்லி: உலக அளவில் இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும் என ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்து உள்ளார்.ஓபன் ஏஐ அதன் மிகவும் மேம்பட்ட ஏஐ மாடலான GPT-5 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது துல்லியம், வேகம் மற்றும் பகுத்தறிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் அந்நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் பேசியதாவது: உலக அளவில் இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும்.இந்தியா நம்பமுடியாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக திகழ்கிறது.அமெரிக்காவை விஞ்சும் திறன் கொண்டது. உலகில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா எங்கள் இரண்டாவது பெரிய சந்தையாகும். மேலும் இது எங்கள் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும்.பயனர்கள் ஏஐ உடன் என்ன செய்கிறார்கள், இந்திய குடிமக்கள் ஏஐ உடன் என்ன செய்கிறார்கள் என்பது உண்மையில் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அதை மிகவும் மலிவு விலையில் வழங்கவும் ஓபன் ஏஐஉள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. செப்டம்பரில் இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sasikumaren
ஆக 10, 2025 01:41

அமெரிக்காவிடம் எப்படி பேசி காரியம் சாதித்து கொள்ள வேண்டும் டிரம்பிடம் வாங்கி கட்டி கொண்டார் நெதன்யாகு இப்போது சாம் சொல்கிறார் நாளைக்கு என்ன ஆகப் போகிறாரோ அந்த டிரம்புக்கு தான் தெரியும்


vivek
ஆக 08, 2025 23:14

நேத்து எடக்கா பேசுனவன் இன்னைக்கு பம்மி பம்மி பேசுறான்..இருக்கட்டும் நோட் பண்ணி வைப்போம்


Karthik Madeshwaran
ஆக 08, 2025 22:26

உனக்கு தெரியுது, ஆனால் உன்னோட சோன்பப்ளினுக்கு தெரியலையே. இன்று உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா தான். அதேசமயம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையும் மிக பெரியது. இந்தியாவை பகைத்து கொள்வது என்பது, ஆற்றின் மீது கோபப்பட்டு, கை கால் அலம்பாமல் போன கதையாகி விடும்.


சமீபத்திய செய்தி