செப். 2 : 'குஜராத்தில், லோக் ஆயுக்தா கோர்ட் அமைத்தது, முற்றிலும் சட்டத்தை மதிக்காத செயல். லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்த, குஜராத் மாநில கவர்னரை திரும்பப் பெற வேண்டுமென, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேரில் சந்தித்து, பா.ஜ., தலைவர் அத்வானி வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பா.ஜ., எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது.செப். 5 : குஜராத்தில், லோக் ஆயுக்தா நீதிபதியை, முதல்வரைக் கேட்காமல் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., ரகளையில் இறங்கியதால், லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு அவைகளும் முடங்கின.செப். 6 : குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமன விவகாரத்தால், எட்டாவது நாளாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடங்கின. அதேநேரத்தில், இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார்.செப். 7 : 'நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் சீர்குலைப்பதே டில்லி குண்டுவெடிப்பின் நோக்கம். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு, அரசு ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோரை இனம் கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த, எல்லாவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்தார்.