உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியல்: மீண்டும் முகேஷ் அம்பானியை முந்திய அதானி

இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியல்: மீண்டும் முகேஷ் அம்பானியை முந்திய அதானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 97.6 பில்லியன் டாலர் சொத்து உள்ளது.பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் ‛அதானி குழுமம்' பங்குச்சந்தை வர்த்தகத்தில் மோசடி செய்து உள்ளது' என ஹின்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. இதனால், அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த அதானி பின்னடைவை சந்தித்தார். இது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‛ இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அல்லது சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. ‛செபி' அமைப்பு தன் விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதனையடுத்து, பங்குச்சந்தையில் ‛அதானி' குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலையேற்றம் கண்டன.இந்நிலையில் ‛புளூம்பெர்க்' வெளியிட்ட பட்டியலில், ஆசியா மற்றும் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை முந்தி முதலிடத்தை பிடித்த அதானியின் சொத்து மதிப்பு 97.6 பில்லியன் டாலர் ஆக அதிகரித்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 97 பில்லியன் டாலர் ஆக உள்ளது.அதேநேரத்தில், உலக பணக்காரர் பட்டியலில் அதானி 12வது இடத்திலும், முகேஷ் அம்பானி13வது இடத்திலும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Thomas
ஜன 05, 2024 22:58

மோடி ஐயா இருக்கும் வரை இவர் தான் முதலிடம்


தாமரை மலர்கிறது
ஜன 05, 2024 21:35

அதானி மிகசிறந்த தொழில் அதிபர். இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 05, 2024 20:40

இத்தப்புரம், நாணமில்லா கோபாலு மற்றும் இன்ன பிறருக்கு எரிச்சலூட்டும் செய்தி ......


jagan
ஜன 05, 2024 20:11

இது கணக்கில் வரும் பணம் மட்டும். கணக்கில் வராத சொத்துகளை சேர்த்தால் குடும்பத்தை யாரும் ஜெயிக்க முடியாது


ramesh
ஜன 05, 2024 20:05

மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அப்பாவி மக்களின் வீடுகள் கூட அதானிக்கு விற்கலாம் .நாம் நம்முடைய வீட்டுக்கே வாடகை செலுத்தும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை


s.sivarajan
ஜன 05, 2024 19:17

பொதுத்துறையின் சொத்துக்களெல்லாம் தனியார் முதலாளிகளுக்கு சொந்தமாகிவிட்டது.


jagan
ஜன 05, 2024 20:17

பொதுதுறை என்றாலே தொழிச்சங்கம், IAS அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதி கல்லா காட்டவே உருவாக்க பட்டவை. போக்குவரத்து டிபார்ட்மெண்டில் யூனியனுக்கு காசு கொடுக்காமல் எந்த உதிரி பாகம் வாங்க முடியாது , அதிகாரிகளுக்கும் ஒரு கட் போகும். பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களால் இழப்பு பல மடங்கு அதிகம். தனியாரால் மட்டுமே தொழில் பெருக்கம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் .


J.Isaac
ஜன 05, 2024 18:07

வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன் எவ்வளவு என்று அறிவிப்பார்களா?


Vathsan
ஜன 05, 2024 17:23

உலக அளவில் முதல் இடம் பிடிக்க வாழ்த்துக்கள். உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


g.s,rajan
ஜன 05, 2024 15:55

Indians are also going Richer and Richer day by day.....


Ambedkumar
ஜன 05, 2024 15:45

Hindenberg நிறுவனம் அதானி நிறுவனத்தைப் பற்றி கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இல்லை என SEBI யின் விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உச்ச நீதி மன்ற அமர்வு SEBI யின் விசாரணை அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்று தீர்ப்பு சொன்ன பிறகு அதானியின் பங்குகளின் விலை உயர்ந்து அதானி முதல் இடத்திற்கு வந்துள்ளார் இதில் மோடி அவர்களை எதற்கு உள்ளே இழுக்குறீர்கள் அறிவாளிகளே?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை