உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கை ஹார்வர்டு பல்கலைக்கு ஒரு பாடம்: நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கை ஹார்வர்டு பல்கலைக்கு ஒரு பாடம்: நிர்மலா சீதாராமன்

ஆமதாபாத்: 2014க்கு பிறகு இந்திய பொருளாதாரத்தை மறுசீரமைத்தது மற்றும் வங்கிகளை கட்டமைத்தது ஆகியன ஹார்வர்டு பல்கலைக்கு ஒரு பாடமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.குஜராத் வணிக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: 2014 முதல் தற்போது வரை இந்தியா தனது பொருளாதாரத்தை மறுசீரமைத்து உள்ளது. குறிப்பாக வங்கிகள் புத்துயிர் பெற்றுள்ளன. இது உண்மையில் ஹார்வர்டு பல்கலைக்கு ஒரு பாடமாக இருக்கும். 2014க்கு முன்னர், வங்கிகள் வராக்கடன் காரணமாக தத்தளித்தன. இதனால், நிறுவனங்களுக்கு வங்கிகளால் கடன் வழங்க முடியவில்லை. கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெரிய நம்பிக்கையாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனது. ஆனால் இந்தியாவில் பல வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு சீராக செயல்படுவதையும் , சவால்களை எதிர்கொள்வதையும் உறுதி செய்தோம். கோவிட்டிற்கு பிறகு, வங்கிகளை ஆரோக்கியமாக வைத்து இருப்பதுடன், திவால் ஆகாமல் வைத்து இருப்பது, மேற்கத்திய நாடுகளுக்கு சாதாரண விஷயமாக இருந்தாலும், நாங்கள் குழப்பமான சூழ்நிலையிலேயே அதனை துவங்கினோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மீண்டும் தேர்தல் பத்திரம்

ஆங்கில பத்திரிகை ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், பா.ஜ., 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால், மீண்டும் தேர்தல் பத்திரம் கொண்டு வரப்படும். அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Lion Drsekar
ஏப் 21, 2024 10:42

இன்றைக்கு இந்த பேச்சு இங்கு எடுபடாமல் போனதற்கு காரணம் ஏழைகளின் உணவான தயிர், நெய், பால் எல்லாவற்றிக்கும் ஜி எஸ் டி மற்றும் சிறு தொழில் எய்பவர்கள் ஒவ்வொரு நாளும் பிச்சை எடுக்கும் நிலையில் இவர்களுக்கும் அதே வரி என்பதால் மிகவும் வெறுப்பில் இருக்கிறார்கள், இன்னமும் சொல்லப்போனால் இதே நிலை நீடித்தால் எல்லோருமே ஏழைகளாக வாழவே விரும்புவார்கள் வந்தே மாதரம்


Azar Mufeen
ஏப் 21, 2024 02:00

இந்தம்மாவ அரைதூக்கத்தில் எழுப்பி வந்து பேட்டி கொடுத்தால் இப்படிதான் எதையாவது உளறுவது


kamaraj jawahar
ஏப் 20, 2024 23:54

எங்கும் வரி எதிலும் வரி என எங்கள் கழுத்தை நெறிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்


K.n. Dhasarathan
ஏப் 20, 2024 20:49

ரொம்ப ஜோக் அடிக்காதீர்கள் மேடம் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிட்டது, அதிலும் மறுபடியும் தேர்தல் பாத்திரம் கொண்டு வருவோம் என்று சொன்னேர்களே சூப்பர் இன்றைக்கு இது போதும் , நாளைக்கு பார்ப்போம் மீதியை


J.V. Iyer
ஏப் 20, 2024 18:57

நல்ல பாடம்


g.s,rajan
ஏப் 20, 2024 18:52

இந்தியர்களின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது ,அதை இவர்களால் மீட்க முடியவில்லை


Suppan
ஏப் 20, 2024 21:40

ஓ அதனால் பாரதத்தின் பொருளாதாரம் உலக அளவில் பத்தாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறதா ? இருநூறு ரூபாய்க்கு ராஜன் ஐயா எப்படியெல்லாம் கூவ வேண்டியிருக்கிறது ?


Suppan
ஏப் 20, 2024 21:49

ராஜன்சார் பாரதப்பொருளாதாரம் அழிந்து விட்டதென்றால் சர்வதேச நாணய நிதியம் பாரதத்தின் இந்த ஆண்டு வளர்ச்சி % இருக்கும் என்று அறிவித்திருக்காதே ? பங்குச்சந்தை இந்தப் பத்தாண்டுகளில் ஆண்டுக்கு % அமெரிக்கா %, சீனா ௨% வளர்ந்திருக்கிறதே? இதெல்லாம் பொய்யா அல்லது உங்களக்குப் பொருளாதாரம் பற்றிச் சொன்னவர் அறிவுக்குருடரோ அல்லது விஷமக்காரரோ ?


sabari
ஏப் 20, 2024 18:34

சாணியில முக்கி அடிச்சாலும் புத்தி வராது இருனூறு கோடி கடன்


Sankar Ramu
ஏப் 20, 2024 17:11

இந்தியாவை பார்த்து பொறாமை கொள்ளும் அவர்கள் பாராட்ட மாட்டார்கள்


அப்புசாமி
ஏப் 20, 2024 17:09

நம்ம ஊர் ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி ஆளுங்களை ஆராயச் சொல்லுங்க.


sankaran
ஏப் 20, 2024 17:07

உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை