உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் வரை இருக்கும்; பார்லியில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தகவல்

பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் வரை இருக்கும்; பார்லியில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என பார்லிமென்டில் இன்று (ஜன.,31) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நாளை (பிப்.,01) 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜன.,31) பார்லிமென்டில் சமர்ப்பித்தார். பின்னர் லோக்சபாவை நாளை காலை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அறிவித்தார்.அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: * இந்திய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது.* வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும். * சில்லரை பணவீக்கம் படிப்படியாக நிர்ணயித்த இலக்கில் சீராக இருக்கும்.* வரும் நிதியாண்டின் 4வது காலாண்டில் உணவு விலைவாசி குறைய வாய்ப்பு உள்ளது.* கிராமப்புறங்களில் நுகர்வு தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.* நாட்டில் தற்போது பாதுகாப்பற்ற கடன்கள் அதிகரித்து வருகிறது. * சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
ஜன 31, 2025 21:51

இந்திய பொருளாதாரம் புலிப்பாய்ச்சலில் செங்குத்தாக விண்ணைநோக்கி ராக்கெட்டில் பறக்கிறது. தொழிற்சாலைகளை கைவிட்ட அமெரிக்கா படுத்துவிட்டது. இன்னும் பத்தே ஆண்டில், இந்தியா அமெரிக்காவை விஞ்சும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த பத்தாண்டில் இப்போதைய சூப்பர் பவராக உள்ள சீனாவை இந்தியா மிஞ்சும்.


guna
ஜன 31, 2025 20:47

கிளி ஜோசியம் பத்தி காக்கைக்கு எவளோ கவலை


venugopal s
ஜன 31, 2025 17:47

இதைப் பார்த்தால் ஆய்வறிக்கை போல் தெரியவில்லை,கிளி ஜோசியம் சொல்வது போல் உள்ளது!


அப்பாவி
ஜன 31, 2025 16:51

11 சதவீதம் தேஞ்சு 6.8 சதவீதமாயிருச்சு. அடுத்த 20 லட்சம் கோடி வங்கிகளுக்கு அவுத்து உடுங்க. அதை வெச்சு மீதிக்காலத்தை ஓட்டலாம்.


Smbs
ஜன 31, 2025 15:22

வளர்சி எல்லாம் இல்ல சோத்துக் கே தாளம் போடுது


guna
ஜன 31, 2025 15:56

அய்யோ பாவம், திராவிட ஆட்சியில் உனக்கே இந்த நிலைமையா? உடனே டாஸ்மாக் சென்று மனதை தேற்றவும்


ஆரூர் ரங்
ஜன 31, 2025 14:26

தேவையற்ற இலவசங்களை நிறுத்தாவிட்டால் ஆறு சதவீத வளர்ச்சியே கடினம்.( இலவச டிவி, மிக்ஸி யார் வீட்டிலாவது இன்னும் உள்ளதா?).ஆந்திராவில் வானளாவிய இலவசங்களை வாக்குறுதியாக அறிவித்த ஜகன் கும்பலை அம்மாநில மக்கள் விரட்டியது போல நாடு முழுவதும் மக்களின் முன்னெடுப்பு அத்தியாவசியம்.


முக்கிய வீடியோ