உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயணிகளுக்கு ரூ.827 கோடியை திருப்பி ஒப்படைத்த இண்டிகோ நிறுவனம்

பயணிகளுக்கு ரூ.827 கோடியை திருப்பி ஒப்படைத்த இண்டிகோ நிறுவனம்

புதுடில்லி: விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளின் 827 கோடி ரூபாய் டிக்கெட் தொகையை திருப்பி செலுத்தி விட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.விமான ஊழியர்களின் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி விமான போக்குவரத்து இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதுகாப்பு விதிகளில் இருந்து அடுத்தாண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை அளிக்கப்பட்ட தளர்வு காரணமாக, மெல்ல மெல்ல விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. நேற்று மட்டும் 1,650 விமானங்கள் இயக்கப்பட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.மொத்தம் உள்ள 138 இடங்களில் ஒரு இடத்தை தவிர்த்து பிற பகுதிகளுக்கு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 75 சதவீத விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று இரவுக்குள் பயணம் ரத்தானவர்களுக்கான டிக்கெட் தொகையை திருப்பி செலுத்த கெடு விதித்திருந்த நிலையில், 827 கோடி ரூபாயை ஒப்படைத்து விட்டதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
டிச 08, 2025 17:08

6 நாட்களில் ரூ 610 கோடி டிக்கட் வருமானமா???அப்போ 365 நாட்களில் ரூ 3,65,000 கோடி வருமானமா இண்டிகோவிற்கு


visu
டிச 08, 2025 15:47

முதலில் விமானக்கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் இது ஏன் நேரத்துக்கு ஏற்றபடி மாறவேண்டும் .நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்கலாமே


comman indian
டிச 08, 2025 13:42

வாய்மையே வெல்லும்


Sudha
டிச 08, 2025 10:35

ஜெட் ஏர்வேஸ் மடிந்த பிறகு கொள்ளையடித்த பணம்


l.ramachandran
டிச 08, 2025 07:29

Indigo is one of the worst airlines in world. That too this airlines is in India means how much corruption going on here.


Thravisham
டிச 08, 2025 11:22

Its becz of Indian mindset. Never Going for safest, always cheapest.


Indhuindian
டிச 08, 2025 07:17

DGCA has compromised the safety of passengers by relaxing the norms for Pilots working hours. If any airline is unable to provde sufficient staff to handle its flights, let the cut down the number of flights per day. By this relaxation of a rule that was imposed more than a year ago, DGCA has allowed the airlines to exchange the safety of thousands of gullible passengers to fill it coffers both by way of cutting down costs by hiring lower number of staff and in the pretext of cancelling the scheduled flights increasing the prics abnormally only with the aim of boosting their bottomline with scant regard to the safety of passengers.


அப்பாவி
டிச 08, 2025 06:53

ஜி.எஸ்.டி, கன்வீனிyanஸ் fee, வங்கி கட்டணங்களை அமுக்கியிருப்பாங்களே?


வாய்மையே வெல்லும்
டிச 08, 2025 10:58

ஜி.எஸ்.டி, கன்வீனிyanஸ் fee, வங்கி கட்டணங்களை அமுக்கியிருப்பாங்களே>> அப்படியா கரீம்பாய் .. முடிஞ்சா அதற்கு கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்குங்க. இங்க எதற்க்கு பெனாத்திட்டு வறீங்க


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை