உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார் இந்திரா": மத்திய அமைச்சர் கடும் தாக்கு

"நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார் இந்திரா": மத்திய அமைச்சர் கடும் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார்'' என மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் கடுமையாக சாடியுள்ளார்.ஒடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அதற்கு பின் நாட்டில் தேர்தலே நடக்காது. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல் இல்லை'' எனக் குறிப்பிட்டார்.இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார். ஜனநாயகத்தை கொன்ற அதே கட்சியின் தலைவர் இப்போது எதிர்காலத்தை கணிக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான அரசை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு எப்படிப்பட்ட ஜனநாயகம் வேண்டும்?. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

K.Ramakrishnan
ஜன 30, 2024 19:22

கொன்றவரைத் தான் கொன்னுட்டாங்களே... நாற்பது வருஷத்து பழைய கதையை பேசி என்னத்த கிழிக்கப் போறீங்க... நீங்க பத்துவருஷமா என்ன செஞ்சீங்க.. 400ரூபாய்காஸ் விலையை 1000 ரூபாய்ஆக்குனீங்க... ஒருடேஸ்டுக்கு ஓட்டலில்போய் சாப்பிட்டால், அதுக்கு வரி போடுறீங்க.. வங்கியில் நாங்க போட்ட பணத்தை எடுக்கிறதுக்கே கெடுபிடி, வரி... இதெல்லாம் எந்த நாட்டிலாவது உண்டா? ஊழலை ஒழிப்பேன்னு சொன்னீங்க.. ஊழல்வாதிகளோடு கூட்டு வைக்கிறீங்க. உங்க கட்சியிலேயே சேர்க்கிறீங்க.. இது தான் ஊழல் ஒழிப்பா?


Sakthi
ஜன 30, 2024 21:33

இதெல்லாம் தீமூக்க காரனே சொல்றத விட்டுட்டான். சொம்புகள் இன்னும் அப்டேட் ஆகணும்


Easwar Kamal
ஜன 30, 2024 18:42

இந்திரா காந்தி எல்லாம் ஏளனமா பேசுவரியே அவர் இருக்கும்போது நீ எல்லாம் கண் காணாத இடத்துல இருந்து இருப்பே. அடுத்து என்ன மோடி கிரேட் தானே. காலம் மாறும் இதே மோடியே பற்றிற கூற இனொரு கூட்டம் வரும். காலம் ஒரு சக்கரம் போன்றது.


அப்புசாமி
ஜன 30, 2024 18:07

இப்பல்லாம் அவ்ளோ கஷ்டப்படத் தேவையில்லை. அங்கங்கே இணைய சேவையை முடக்கலாம். 22000 போலுசை வெச்சு மக்களை அடிச்சு முடக்கலாம். அதிருஷ்டக் காரங்க நீங்க.


ஆரூர் ரங்
ஜன 30, 2024 16:34

1971 க்கு அடுத்து 1976 இல் தேர்தல் நடத்த விடாமல் பார்லிமென்ட் ஆயுட்காலத்தை ஓராண்டு நீடித்து (தானே சுரண்ட வசதியாக) ஜனநாயகத்தைக்???? கொலை செய்தது இந்திரா. அதற்கு வசதியாக எல்லா எதிர்கட்சி MP க்கள், தலைவர்களையும் வழக்கே பதிவு செய்யாமல் சிறையில் வைத்தார். 60 க்கும் மேற்பட்ட முறை எதிர்கட்சி ஆண்ட மாநில அரசுகளைக் கலைத்தார். நாட்டில் ஜனநாயகத்தை கொலை செய்ததில் முதலிடம் அவருக்கே.


அப்புசாமி
ஜன 30, 2024 13:40

எந்நாட்டிலும் இல்லாத அளவுக்கு பிரதமர், ஜனாதிபதின்னு வந்தா 22000 போலுசை ஏவி மக்களை அடிச்சு முடக்குறாங்க. அது என்ன கொலை?


Barakat Ali
ஜன 30, 2024 13:40

முற்றிலும் சரியாகச்சொன்னார் ......... வரலாறு அறியாதவர்கள் இவரை இகழ்வார்கள் ....


A Viswanathan
ஜன 30, 2024 12:36

100 க்கு நூறு உண்மை


Palanisamy Sekar
ஜன 30, 2024 12:33

மோடிஜி ஆட்சிக்கு வரும் முன்னர் இப்படித்தான் பொய் பிரச்சாரம் செய்தார்கள். மோடி வந்துவிட்டால் இந்த நாட்டில் சிறுபான்மையினர் வாழவே முடியாது. ஒழித்துவிடுவார் என்றெல்லாம் சொன்னார்கள் இந்த காங்கிரஸ் கூட்டணியினர். கடந்த பத்து ஆண்டுகளில் மதநல்லிணக்கம் நன்கு பேணப்படுகின்றது. அனைவரும் மதிக்கப்படுகின்றார்கள். என்ன...ஊழல் செய்யும் கும்பலும் குடும்ப ஆட்சியினருக்கும் வந்துள்ள பயம் மட்டும்தான் மோடியால் வந்த வினை. தேச துரோகிகள் கண்காணிக்கப்படுவதை செய்ததால் அந்த பாதிப்பில் திமுக போன்ற கட்சியில் உள்ளவர்கள் பயப்படுகின்றனர். அதனால் காங்கிரசின் பொய் பிரச்சாரம் ஒருபோதும் எடுபடாது..


Sampath Kumar
ஜன 30, 2024 12:19

வாயை திறந்தாள் பொய்யும் புரட்டும் போவியா


hari
ஜன 30, 2024 14:34

நீ முதல்ல போயேன்... எவன் உன்ன கூப்பிட்டான்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 19:56

உனக்கு இந்திரா ன்னா யாருன்னு கூட தெரிஞ்சிருக்காது .........


bogu
ஜன 30, 2024 12:06

உண்மையான பேச்சு இது திமுகவினர்கே தெரியும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி