| ADDED : பிப் 22, 2024 07:11 AM
பெங்களூரு: போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக, மாணவர்களை ஏற்றிச் செல்லும், 2,059 பள்ளி வாகனங்களில், போக்குவரத்து போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.பெங்களூரு நகரில் பள்ளி வாகன ஓட்டுனர்கள், போக்குவரத்து விதிகளை மீறுவதாக, போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.இதன் அடிப்படையில், நகரில் பல்வேறு இடங்களில், நேற்று காலை 7:30 மணி முதல், 9:30 மணி வரை, போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.மாணவர்களை ஏற்றிச் செல்லும், 2,059 பள்ளி வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டன. அப்போது, 331 வாகனங்களில், அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் அழைத்துச் செல்வது கண்டறியப்பட்டன.மேலும், அந்த வாகன ஓட்டுனர்கள் மது அருந்தியுள்ளனரா என்று சோதனை நடத்தப்பட்டது. இதில், 7 ஓட்டுனர்கள் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.விதிகளை மீறிய வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோன்று, அடுத்தடுத்த நாட்களிலும், அடிக்கடி சோதனை நடத்தி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.