உள்ளூர் செய்திகள்

பேட்டி

உத்தரவிட்டது யார்?

புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான இணையவழி, ‘படிவம் – 6’ சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது என, தேர்தல் கமிஷனர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த மாற்றத்தை செய்ய, ‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனத்துக்கு உத்தரவிட்டது யார்? இதை செய்ய அவர்களுக்கு ஏதாவது அழுத்தம் தரப்பட்டதா?- ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர்காங்கிரஸ்

இணைக்க வேண்டும்!

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில், எஞ்சியிருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுடன் அக்கட்சியை காங்கிரசுடன், அதன் தலைவர் மம்தா பானர்ஜி இணைக்க வேண்டும். அவர் தலைமையில் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.- ஆதிர் ரஞ்சன் சவுத்ரிமுன்னாள் எம்.பி., காங்கிரஸ்

மன்னிக்க மாட்டார்கள்!

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், உண்மையான வாக்காளர்களின் உரிமையை மறைத்து விட்டார். நாடு முழுதும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சட்டப் பாதுகாப்பை பயன்படுத்தி, தலைமை கமிஷனர் பதவியில் அவர் நீடிப்பதை ஏற்க முடியாது.- மம்தா பானர்ஜிதலைவர், திரிணமுல் காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை