மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
1 hour(s) ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
3 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
3 hour(s) ago
புதுடில்லி: உ.பி.யில் இளைஞர்கள் எப்போதும் போதையில் இருக்கிறார்கள் என்று ராகுல் எப்படி கூறினார்? என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் யாத்திரை மேற்கொண்ட போது மக்கள் மத்தியில் ராகுல் பேசுகையில்,‛‛ வாரணாசிக்கு சென்றபோது இரவில் வாத்தியங்கள் முழங்குவதை பார்த்தேன். உ.பி.,யில் மாணவர்கள் போதையில் சாலையில் கிடந்ததை பார்த்தேன். உத்தரபிரதேசத்தில் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?. இன்னொரு பக்கம் ராமர் கோயிலில் பிரதமர் மோடியும், அம்பானியும், அதானியும் இருக்கின்றனர். ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் நபரைக் கூட பார்க்க முடியாது'' எனக் குறிப்பிட்டார்.பெண்கள் பாலியல் பலாத்காரம்
இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் பேசியதாவது: இது மிகவும் வேதனையானது. ராகுல் எப்போது கற்றுக்கொள்வார்?. உ.பி.யில் இளைஞர்கள் எப்போதும் போதையில் இருக்கிறார்கள் என்று அவர் எப்படி கூறினார்?. மக்களை இழிவுபடுத்துவதை நான் கண்டிக்கிறேன். சந்தேஷ்காலி கிராமத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இன்னும் இண்டியா கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. அமைதியாக இருக்கின்றனர். வழக்கறிஞர் பாலி நாரிமன் உடன் பணியாற்றும் பாக்கியமும் மரியாதையும் எனக்கு கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago