உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதயநிதி: கேலோ இந்தியா விளையாட்டுவிழா பிரதமருக்கு அழைப்பு: சோனியா உடன் மரியாதை நிமித்த சந்திப்பு

உதயநிதி: கேலோ இந்தியா விளையாட்டுவிழா பிரதமருக்கு அழைப்பு: சோனியா உடன் மரியாதை நிமித்த சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி கேலோ இந்தியா விளையாட்டு துவக்க விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.தொடர்ந்து காங்., தலைவர்களில் ஒருவரான சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவும் கூறினார்.அரசின் திட்டத்தின் கீழ் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.2021ல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலிலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ளன. வரும் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், டில்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்தித்தார். அப்போது, அவர் கேலோ இந்தியா விளையாட்டு துவக்க விழாவுக்கு அழைப்பிதழை, பிரதமரிடம் வழங்கினார்.

சோனியா, ராகுலுடன் சந்திப்பு

இதை தொடர்ந்து காங். மூத்த தலைவர் சோனியா, ராகுல் ஆகியோரையும் உதயநிதி சந்தித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி மேற்கண்ட இருவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

jayvee
ஜன 05, 2024 13:48

சோனியாவை சந்தித்தது மரியாதையை நிமித்தமாக .. அப்படியென்றால் மோடியை சந்தித்தது பயந்துபோயா ?


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 10:27

கேலோ விளையாட்டு திட்டம் என்றால் என்ன என்றே பலருக்கு தெரியாது. ஆனால் விமர்சனம் மட்டும் வைப்பார்கள். இது ஒன்றிய அரசால் உருவாக்க பட்டது. மாற்று கட்சியோ, எதிரி கட்சியோ, நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியோ, எவர் ஆட்சி செய்தாலும், பிரதமர் நாற்காலிக்கு உண்டான மரியாதை எப்போதும் கொடுக்க பட வேண்டும் என்பதே திமுக கட்சியின் நோக்கம். அதற்கான மரியாதை கொடுத்தாகி விட்டது.


ஜஜ
ஜன 05, 2024 12:26

நல்ல மரியாதை


vbs manian
ஜன 05, 2024 10:03

கேலோ இந்தியா பெயர் ஹிந்தியில் உள்ளது. ஏன் தமிழ் பிரியர்கள் தமிழ் படுத்தவில்லை.


karunamoorthi Karuna
ஜன 05, 2024 08:57

அது என்ன கேளோ இந்தியா இந்தியில் உள்ளதே இது மத்திய அரசு நிதியில் நடத்துகிறதா இல்லை மாநில அரசு நிதியில் இருந்து நடத்துகிறதா இதில் எவ்வளவு சதவீதம் கமிஷன் கலெக்ஷன் வசூல் செய்து திருடுவார்களோ திருடர்கள் முன்னேற்றக் கழகத்தினர்


sankaranarayanan
ஜன 05, 2024 08:32

இவரு என்ன வெள்ள தண்ணீரில் போட் ரேசு விடப்போறாரா இப்போ? இல்லை சென்னையிலும் தூத்துக்குடியில் நீச்சல் போட்டி நடக்குமா? ஊரு நாசமான என்ன எங்களுக்கு போட்டி நடத்தணும் பணத்தை சுருட்டும் அதுதானய்யா எங்கள் கொள்கை


kijan
ஜன 05, 2024 05:50

நம்ம கொள்கை ரொம்ப சிம்பிள் .....இந்த பக்கம் ...பாரத் மாத்தா கி ஜெ .... அந்த பக்கம் இண்டி ஆத்தா கி ஜெ ....


Mani . V
ஜன 05, 2024 04:57

எங்களுக்கு இந்த வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் கிடையாது. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. நாங்களே மண்டியிட்டுக் கொள்வோம்.


Ramesh Sargam
ஜன 05, 2024 01:21

சோனியாவும், ராகுலும் இந்த உதவா நிதியிடம் இனியும் சனாதானத்தை பற்றி ஏடாகூடமாக பேசி அந்த I.N.D.I.A. கூட்டணியின் கதையை முடித்துவிடாதே என்று கடுமையாக கடிந்துகொண்டிருப்பார்கள்.


Bala
ஜன 05, 2024 00:15

திருட்டுத் திராவிடத் தெலுங்கு இழவராசன் (இளவரசனல்ல) பதினொன்று மோடியை சந்தித்துக் காலில் விழுந்திருப்பான் திருட்டுத் திராவிடத் தெலுங்கு மாதிரி.


K.Ayyappan
ஜன 04, 2024 23:05

ஆமாம் அது என்ன "கேலோ" இந்தியா? நாங்கள் அனைவரும் தமிலர்கள் அல்லவா?


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ