உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேபரேலியில் பிரியங்காவை எதிர்த்து வருண் போட்டியா ?

ரேபரேலியில் பிரியங்காவை எதிர்த்து வருண் போட்டியா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உ.பி., மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதியில் பிரியங்காவை எதிர்த்து பா.ஜ.,சார்பில் வருண் களம் இறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. நாளை (ஏப்.26) 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.இந்நிலையில் உ.பி. மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதி தற்போதைய எம்.பி.யான சோனியா, திடீரென ராஜ்யசபா எம்.பி.,ஆனார். இதையடுத்து இத்தொகுதியில் காங்., வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. தவிர ராகுல் தொகுதியாக இருந்த அமேதியில் யார் காங்., வேட்பாளராக போட்டியிட உள்ளார் என்பதும் முடிவாகவில்லை.இந்நிலையில் ரேபரேலியில் சோனியா மகள் பிரியங்கா களம் இறக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்., அதிகாரப்பூர்வமாக பிரியங்காவை அறிவித்தால், அவரை எதிர்த்து பா.ஜ.,வின் தற்போதைய பிலிபித் தொகுதி எம்.பி.யும், மேனகாவின் மகனுமான வருணை நிறுத்த பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இதனை வருண் மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஏப் 25, 2024 21:54

என்னுடைய அம்மா நாட்டிற்காக தாலியை இழந்தார் ஆனால் உன் கழுத்தில் கூட தாலி இல்லையே என்னவென்று அர்த்தம் செய்துகொள்வது?


Duruvesan
ஏப் 25, 2024 19:51

நுப்பூர் சர்மா உண்மையான ஒரு நல்ல கேண்டிடேட்


Bye Pass
ஏப் 25, 2024 19:38

பிரியங்கா ராமநாதபுரத்தில் போட்டியிட்டிருக்கலாம்


Godfather_Senior
ஏப் 25, 2024 19:28

வருணுக்கு சீட் கொடுத்தால் பாஜக தோல்வி நிச்சயம் அவரை தோற்கடிக்கவே பலி கடாவாக நிறுத்தப்பட்டாலும் ஆச்சர்யமில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை