உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்-1 புள்ளியை அடைந்தது ஆதித்யா-எல்1 விண்கலம்: மைல் கல்லை எட்டியது இந்தியா; பிரதமர் மோடி பாராட்டு

எல்-1 புள்ளியை அடைந்தது ஆதித்யா-எல்1 விண்கலம்: மைல் கல்லை எட்டியது இந்தியா; பிரதமர் மோடி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று(ஜன.,06) மாலை 4.11 மணிக்கு எல்-1 புள்ளியை அடைந்தது என பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆதித்யா எல்-1 விண்கலத்தின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.சூரியனை ஆய்வு செய்ய, கடந்த செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

எல்.புள்ளியில் நிலைநிறுத்தம்

இந்நிலையில் இன்று(ஜன.,06) 127 நாட்களுக்கு பின், எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது என பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மைல் கல்லை எட்டியது இந்தியா

மேலும் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மனிதகுலத்துக்கு பலனளிக்கும் புதிய அறிவியல் எல்லைகளை அடைவதற்கு இந்தியா தொடர்ந்து பணியாற்றும். விஞ்ஞானிகள் அற்பணிப்புடன் பணியாற்றியதற்கான சான்று இது. புதிய மைல் கல்லை எட்டியது இந்தியா. இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது: சூரியனின் செயல்பாடுகளையும், வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள 7 சாதனங்கள், இந்த ஆய்வில் ஈடுபடும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Naagarazan Ramaswamy
ஜன 07, 2024 08:31

லாக்ராஞ்சின்ஜியன புள்ளியில் துல்லியமாக உறுதியாக நிலை நிறுத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்


Ramesh Sargam
ஜன 07, 2024 01:14

இந்தியாவின் விண்வெளி சாதனை உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது. உலகமே இன்று இந்தியாவை உற்றுநோக்கி பார்க்கிறது. எல்லாப்பெருமையும் மோடி அவர்களை சேரும். வாழ்க மோடி. வளர்க பாரதம்.


Sankar Ramu
ஜன 07, 2024 00:52

வாழ்த்துக்கள்.


சோலை பார்த்தி
ஜன 06, 2024 22:53

இந்திய நாட்டின் வெற்றி மட்டும் இல்லை ஒவ்வொரு இந்தியனின் வெற்றி ஜெய்ஹிந்த்....பாரதமாதா க்கு ஜே


சண்முகம்
ஜன 06, 2024 22:35

L1 புள்ளி (,Lagrange Point) என்பது திருசங்கு சொர்க்கம் போல். அங்கு பூமியின் ஈர்ப்பும் சூரியனின் ஈர்ப்பும் குறைவாக இருக்கும்.


ராஜா
ஜன 06, 2024 21:05

ஒரு நாட்டின் அறிவியல் பலம் விண்வெளியில் தான் நிரூபணம் ஆகிறது. அரசியல் பலம் ஊழலற்ற அரசாங்கங்கள் உருவாகுவதில் உள்ளது.அதுவும் விரைவில் இந்தியாவில் அமைய வாழ்த்துக்கள்.


பைரவர் சம்பத் குமார்
ஜன 06, 2024 18:35

1). அனைத்து இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்.2). வெற்றி தொடரட்டும்.


Seshan Thirumaliruncholai
ஜன 06, 2024 18:14

உன்னுடைய கடமை பணி செய்வதே. பலன் அளிப்பது நம்மை இயக்கும் சக்தி. நம்பிக்கைதான் ஒவ்வொரு செயல்களில் படிப்படியாய் முன்னேறுகிறோம். வாழ்த்துவதுடன் மேலும் மேலும் வெற்றி பெற பிரார்த்திக்கிறோம்


Oru Indiyan
ஜன 06, 2024 18:09

இஸ்ரோ அறிவாளிகளுக்கு பாராட்டுக்கள்


வெகுளி
ஜன 06, 2024 17:45

வாழ்த்துக்கள் இஸ்ரோ...


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி