உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛உங்களின் கனவுகளை நிறைவேற்றுவேன்: இளம் வாக்காளர்களிடம் பிரதமர் மோடி உறுதி

‛உங்களின் கனவுகளை நிறைவேற்றுவேன்: இளம் வாக்காளர்களிடம் பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: ‛‛ உங்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் '' என இளம் வாக்காளர்கள் மத்தியில் பேசும் போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.1950 ஜன.,25 ல் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில், 2011ம் ஆண்டு முதல் ஜன.,25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாடி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.அப்போது மோடி பேசியதாவது: இளம் வாக்காளர்களுடன் இருப்பது உற்சாகத்தை தருகிறது. ஜனநாயக நடைமுறையில், நீங்கள் முக்கியமான அங்கமாக மாறி உள்ளீர்கள். அடுத்த 25 ஆண்டுகளில், நாடு மற்றும் உங்களின் எதிர்காலத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். உங்களின் ஓட்டு எதிர்கால இந்தியாவையும், நாட்டின் பாதையையும் நிர்மாணிக்கும் சக்தி பெற்றவை.நாட்டின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும் போது, அரசு எடுக்கும் கொள்கை மற்றும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும். நிலையான அரசு பெரிய முடிவுகளை எடுக்கும். பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பிரச்னைகளை பா.ஜ., அரசு தீர்த்து வைத்தது. உலக தலைவர்களை சந்திக்கும் போது, நான் மட்டும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதாக கருதவில்லை. 140 கோடி மக்களும் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன். இன்று, இந்திய பாஸ்போர்ட் உலகம் முழுவதும் பெருமையுடன் பார்க்கப்படுகிறது.கடந்த 10- 12 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய சூழ்நிலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. முன்பு ஊழல், முறைகேடுகள் தலைப்புச் செய்திகளாக வந்தன. ஆனால், இன்று வெற்றிக்கதைகள் குறித்து பேசப்படுகிறது. குடும்பத்தினரால் நடத்தப்படும் கட்சிகள், இளைஞர்களை முன்னேறி செல்ல அனுமதிப்பது கிடையாது. அவர்களை உங்களின் ஓட்டுகள் மூலம் தோற்கடியுங்கள். உங்களின் கனவே எனது லட்சியம். இது மோடியின் வாக்குறுதி. இவ்வாறு மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

g.s,rajan
ஜன 25, 2024 22:02

நமது நாட்டு இளைஞர்களுக்கு கனவிலாவது வேலை கிடைக்குமா...???


RAMAKRISHNAN NATESAN
ஜன 26, 2024 13:34

உனக்குத்தான் தத்தியின் உபயமா கையில இருநூறு ஊவா வருதே ??


g.s,rajan
ஜன 25, 2024 21:55

பிஜேபி யின் பத்தாண்டு கால ஆட்சியில் ஆண்டுக்கு ரெண்டு கோடிப்பேருக்கு வேலை கிடைச்சாச்சு ,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் இருபது கோடி ,இளைஞர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைச்சுடுச்சு அப்புறம் என்ன கவலை ....???


முருகன்
ஜன 25, 2024 21:35

எப்போது என்பதை சொல்ல முடியாது ஏனெனில் பந்து வருடங்கள் ஆகியும் நிறைவேற்ற முடியவில்லை அல்லவா


A1Suresh
ஜன 25, 2024 17:07

மோடிஜியின் ஆட்சி தொடர்ந்தால், கிபி இரண்டாயிரத்து நாற்பத்து ஏழில் பாரதம் சீனாவை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் இரண்டாமிடத்திற்கு செல்லும். இன்னும் மூன்று வருடங்களில் ஜெர்மனி, ஜப்பானை தாண்டி விடும். ஜெய் மோடி சர்க்கார். மோடிஜிக்கு பின்னர் 29 ல் யோகிஜி வருவார். ஆயுஷ்மான் பவ மோடிஜி. விஜயீ பவ மோடிஜி


ஆரூர் ரங்
ஜன 25, 2024 16:02

அயோத்தி ராமர் ஆலயம் எனும் 500 ஆண்டுக்கனவு நனவாகியுள்ளது. 370 ஆம் பிரிவு நீக்கம் காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு என்ற நீண்ட நாள் கனவு பலித்துள்ளது. முத்தலாக் ஒரே நேர முத்தலாக் செல்லாது என்ற சட்டம் கோடிக்கணக்கான இஸ்லாமியப் பெண்களின் கஷ்டத்தைப்???? போக்கியுள்ளது. வேறு விதமான 17 வரிகளை ஒன்றாக்கி ஜிஎஸ்டி எனும் ஒரே வரியாக ஆக்கியது உண்மையான நேர்மையான வணிகர்களை மகிழ்வித்துள்ளது. ஏழைகளுக்கான ஜன்தன் கணக்கு மத்திய மாநில அரசுகளின் எல்லா சலுகைகளையும் நேரடியாக அவரவர் வங்கிக்கணக்கில் சேர்த்து ஊழல் ஒழிப்புக் கனவை நனவாக்கியுள்ளது. விளையாட்டுத்துறைக்கு அதிக ஊக்கம் கொடுத்ததால் சர்வதேசப் போட்டிகளில் பல மடங்கு பதக்கங்களை வெல்ல முடிகிறது. இது இளைஞர்களின் கனவுகளை மெய்ப்பித்திருக்கிறது. சந்திரயான் நாட்டின் புகழை???? விண்ணுக்கே எடுத்துச் சென்றுவிட்டது.


மோகனசுந்தரம்
ஜன 26, 2024 06:02

ஆரூர் ரங் சார், இன்னும் எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்துள்ளார். 10 கோடி மக்களுக்கு எரிவாயு இணைப்பு, 12 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி, 40 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு, புதிய வீடு கட்டிக் கொடுத்தது, எத்தனையோ கோடி மக்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தது. இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம். வாழ்த்துக்கள்.


saravan
ஜன 25, 2024 15:51

வயதும் சம்பளமும் விலைவாசியும் ஏறத்தான் செய்யும். விலைவாசியை மட்டும் பேசாதே உன் சம்பளம் எவ்வளவு உயர்ந்துள்ளது என பார். லஞ்சத்தையே சம்பளம் போல கூட்டுறானையா. கேட்ட கட்டுப்பிடியாகளென்றான்...


Narayanan
ஜன 25, 2024 15:23

பெட்ரோலிய பொருள்களின் விலையை குறையுங்கள் . ஜி எஸ் டி மூலம் சாதாரண மக்களில் வ்ருமானத்தில் கிட்ட தட்ட எண்பது சதவீதம் அரசு எடுத்துக்கொள்கிறது .நேர்முகமாக / மறைமுகமாக .. பருப்புகளின் விலை கட்டுக்குள் இல்லை . இவற்றை கவனத்தில் கொள்ளவும்


raja
ஜன 25, 2024 14:15

தமிழக இளைஞர்களின் கனவு நீங்கள் மறுபடி வந்து முதல் கையெழுத்தில் இந்த விடியாத திருட்டு மாடல் அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரணும்...செய்வீர்கள் என்றால் இளைஞர்கள் ஒட்டு உங்களுக்குதான்...


sahayadhas
ஜன 25, 2024 13:13

அபோ, வேலை சீக்கிரம் கிடச்சுருமா?,


கலிவரதன்,திருச்சி
ஜன 25, 2024 17:44

யாருக்கு ஓட்டு போட சொல்றாரோ அவர்களுக்கு ஓட்டு போடுங்க வேலை கிடைச்சிடும்.


hari
ஜன 26, 2024 06:54

ஓசி சோறு சாப்பிடாம வேலை தேடு... கிடைக்கும்...


babu
ஜன 25, 2024 13:09

2014 சொன்ன அதே வடை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை