உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது ராகுலுக்கும் மோடிக்கும் இடையிலான தேர்தல்: அமித்ஷா பேச்சு

இது ராகுலுக்கும் மோடிக்கும் இடையிலான தேர்தல்: அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: ''இந்த 2024 லோக்சபா தேர்தலானது, ராகுலுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையிலான தேர்தல்; ராகுலின் 'சைனீஸ் கியாரன்டி' மற்றும் பிரதமர் மோடியின் 'பாரதிய கியாரன்டி'க்கு இடையேயான தேர்தல்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.தெலுங்கானா மாநிலம் போன்கீர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: இந்த 2024 லோக்சபா தேர்தலானது, ராகுலுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையிலான தேர்தல். அதாவது, 'ஜிஹாத்துக்கான ஓட்டு' மற்றும் 'வளர்ச்சிக்கான ஓட்டு' ஆகியவற்றிக்கு இடையிலான தேர்தல். ராகுலின் 'சைனீஸ் கியாரன்டி' மற்றும் பிரதமர் மோடியின் 'பாரதிய கியாரன்டி'க்கு இடையேயான தேர்தல். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7hhwh07s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடந்து முடிந்த 3 கட்ட தேர்தல்களின் முடிவில் நாங்கள் (தேசிய ஜனநாயக கூட்டணி) 200 இடங்களை நெருங்கிவிட்டோம். அடுத்து தெலுங்கானாவிலும் வெற்றிப்பெற்று மொத்தத்தில் 400 இடங்களை கைப்பற்றுவோம். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தெலுங்கானா மக்கள் எங்களுக்கு 4 தொகுதிகளில் வெற்றியை கொடுத்தனர். இந்தமுறை, 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெறுவோம்.

பொய்கள்

காங்கிரஸ் பொய்களை கூறி தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. பிரதமர் மோடி பிரதமரானால், இடஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார் என்கிறார்கள். பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை ஒருமனதாக வழிநடத்தி வருகிறார்; இடஒதுக்கீட்டை நிறுத்தவில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு அளித்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை சூறையாடியது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

முருகன்
மே 10, 2024 14:22

ஒரு மனதாக. ஆம் ஹிந்துக்கள் மட்டுமே இந்தியா என்ற கொள்கை உடன்


ameen
மே 09, 2024 22:13

ராகுல் எனும் கங்கை


Syed ghouse basha
மே 09, 2024 18:18

இந்தியா கூட்டணி வெல்லும் அதை நாளைய சரித்திரம் சொல்லும் உண்மையான சப்கே சாத் சப்கே விகாஸ் இளம் தலைவர் ராகுலின் தலைமையில் நடக்கும் பாரத்மாதாகீ ஜெய்


Vathsan
மே 09, 2024 17:26

சொல்லிவிட்டு நீங்களே ராகுலுக்கும் மோடிக்கும் தான் சண்டை என்கிறீர்கள் அப்படி


என்றும் இந்தியன்
மே 09, 2024 16:42

ஒரு கங்கை நதியும் வீதியில் செல்லும் சாக்கடையும் ஆகிய இரண்டும் ஒன்றா???


MADHAVAN
மே 09, 2024 16:38

விவசாய சுரண்டல், கற்பழிப்பு, பலாத்காரம், மதம், சாதி போன்ற கொள்கைக்கு காங்கிரசின் ஊழல்கூட பரவால்லை,


சாமிநாதன்,மன்னார்குடி
மே 09, 2024 18:56

ஏலே திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வச்சிருக்கு என்பதை மறந்து கூட்டணி தர்மத்துக்கு எதிராக பேசாதே


Thirumal s S
மே 09, 2024 16:31

ராகுலை பப்புனு சொன்ன வாய் இது இப்ப மாறி போச்சே


ராமகிருஷ்ணன்
மே 09, 2024 14:53

அதாவது பி ஜே பி யின் அபார வெற்றிக்கு ராகுல்காந்தி மட்டுமே சரியானவர் என்று சொல்ல வருகிறார்.


Narayanan Muthu
மே 09, 2024 19:47

அதாவது பிஜேபிக்கு ராகுல் சிம்ம சொப்பனமாக இருக்கிறார் பப்பு என வாய் கூசாமல் சொன்னவர்கள் பயந்து நடுங்கும் தலைவனாக ராகுல் இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தி ராகுல் தோல்வி பயத்தின் உச்சத்தில் பாஜக


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை