மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
59 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
முன்னாள் முதல்வர் மீண்டும் பா.ஜ., செல்ல, காங்கிரஸ் மூத்த அமைச்சர் எம்.பி.பாட்டீல் காரணம் என, அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.சபாநாயகர், முதல்வர், எம்.எல்.ஏ., உட்பட, பா.ஜ.,வில் அனைத்து முக்கிய பதவிகளையும் அனுபவித்தவர் ஜெகதீஷ் ஷெட்டர், 67. ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், ஹிந்துத்துவா கொள்கைக்கு சற்றும் பொருந்தாத, காங்கிரஸ் கட்சிக்குச் சென்றார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், கர்நாடகாவின் வட மாவட்ட ஓட்டுகளை கவர, காங்கிரஸ் மேலிடம் அவரை சேர்த்துக் கொண்டது. அவரால் கட்சிக்கு யானை பலம் கிடைக்கும் என்றும், காங்கிரசார் கூறிக் கொண்டனர்.சட்டசபை தேர்தலில் தோற்றாலும், எம்.எல்.சி., பதவி வழங்கி, ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் கவுரவப்படுத்தியது. லோக்சபா தேர்தலில் வட மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற, அவரை வைத்து, காங்கிரஸ் பெரிய பிளான் வைத்திருந்தது. மீண்டும் தாய் கட்சி
ஆனால் கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டு, தாய் கட்சியான பா.ஜ.,வுக்கே மீண்டும் சென்றுவிட்டார். இதன் பின்னணியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திராவின் கை வண்ணமும் உள்ளது. பா.ஜ.,வுக்கு திரும்பிய ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை காங்கிரஸ் கட்சி மீது எந்த புகாரும் கூறவில்லை.அப்படி இருக்கும்போது, எதற்காக மீண்டும் பா.ஜ., சென்றார் என்ற கேள்வி எழுந்தது. அரசியல் வட்டாரங்களில் அலசி, ஆராய்ந்தபோது, உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது. பனிப்போர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் எம்.பி.பாட்டீல். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு, வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளது. கர்நாடகா காங்கிரஸ் பிரசார குழு தலைவராகவும் உள்ளார். முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரும் கூட.கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே, எம்.பி.பாட்டீலுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையில், பனிப்போர் நிலவியது. இச்சூழ்நிலையில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த, ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ., 'சீட்' கிடைக்காமல் அதிருப்தியில் இருந்தார். அவரிடம் நைசாக பேசி காங்கிரஸுக்கு அழைத்து வந்தார் சிவகுமார். லிங்காயத் தலைவர் என்று, ஜெகதீஷ் ஷெட்டரை முன்னிலைப்படுத்தி, எம்.பி.பாட்டீலின் ஆணவத்தை அடக்க வேண்டும் என்பது சிவகுமாரின் கணக்காக இருந்தது. பிரசார குழு உறுப்பினர்
ஆனால் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர் என்பதால், எம்.பி.பாட்டீலை, ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதற்கிடையில் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சர் பதவி எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் பிரசார குழுத் தலைவராக விரும்பினார். ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த பதவியை விட்டு தர மாட்டேன் என்று, எம்.பி.பாட்டீல் பிடிவாதம் பிடித்துள்ளார். வேண்டும் என்றால் பிரசார குழுவில், ஒரு உறுப்பினராக ஷெட்டரை சேர்த்துக் கொள்கிறேன் என்றும் கூறி இருக்கிறார்.வேறு வழியின்றி பிரசார குழுவில், ஜெகதீஷ் ஷெட்டரை உறுப்பினராக சேர்த்து உள்ளனர். தன்னை விட வயதில் குறைந்த, எம்.பி.பாட்டீலின் கீழ் வேலை செய்ய, ஜெகதீஷ் ஷெட்டருக்கு விருப்பம் இல்லை. நேரம் கிடைக்கும் போது எல்லாம், ஜெகதீஷ் ஷெட்டரை மட்டம் தட்டி, எம்.பி.பாட்டீல் பேசி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.கடுப்பில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு வலை விரித்து, எடியூரப்பா மீண்டும் பா.ஜ.,வுக்கே அழைத்து வந்துவிட்டார். ஒன்பது மாதம் மட்டுமே காங்கிரசில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் சென்றதால், கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை; காங்கிரசுக்கு விழ வேண்டிய லிங்காயத் ஓட்டுகள், காங்கிரசுக்கே கிடைக்கும் என்று எம்.பி.பாட்டீல் கூறி இருக்கிறார். அதிகார போட்டிக்காக, நடந்த சண்டையில், யார் பெரியவர் என்பது லோக்சபா தேர்தல் முடிவு காட்டும்.- நமது நிருபர் -
59 minutes ago
1 hour(s) ago