உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இப்படி ஒரு அமெரிக்க அதிபரை உலகம் கண்டது இல்லை; ஜெய்சங்கர்

இப்படி ஒரு அமெரிக்க அதிபரை உலகம் கண்டது இல்லை; ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''வெளியுறவு கொள்கையை இப்படி வெளிப்படையாக அனைவரது முன்னிலையில் செயல்படுத்தும் அமெரிக்க அதிபரை இதுவரை உலகம் கண்டதில்லை'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், ''இந்தியாவின் கொள்கைகள் அதன் தேசிய நலனுக்காகவே இருக்கும்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=doqlfy11&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து டில்லியில் நடந்த உலக தலைவர்கள் மாநாட்டில் ஜெய்சங்கர் பேசியதாவது:வெளியுறவு கொள்கையை இப்படி வெளிப்படையாக அனைவரது முன்னிலையில் செயல்படுத்தும் அமெரிக்க அதிபரை இதுவரை யாரும் கண்டதில்லை. இது ஒரு மிகப்பெரிய மாற்றம். இந்தியாவுக்கு மட்டுமில்லை, உலக நாடுகள் மட்டுமின்றி சொந்த நாட்டையும் டிரம்ப் கை யாளும் அணுகுமுறை வழக்கமான நடை முறை களில் இருந்து மிகவும் மாறுப்பட்டதாக உள்ளது. அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தங்களில் சிக்கல் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கோட்பாடு, கொள்கைகள் உள்ளன. இந்தியாவின் கொள்கைகள் அதன் தேசிய நலனுக்காகவே இருக்கும். இந்தியா தனது தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. கடந்த 2022ம் ஆண்டில் எண்ணெய் விலை உயர்ந்த காரணத்தினால் சர்வதேச அளவில் பதட்டம் நிலவியது. எண்ணெய் விலைகளை உயர்வை கட்டுப்படுத்தவும், சரியான விலையை உறுதி செய்யவும் நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறோம். ரஷ்யா உடன் வர்த்தகத்தை நாங்கள் அதிகரிக்க விரும்புகிறோம். அதேநேரத்தில் உக்ரைன் போரில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் பிரச்னைக்கு விரைவில் முடிவு காண விரும்புகிறேன். விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

subramanian
ஆக 23, 2025 23:14

நாங்கள் எங்கு எதை எப்போது எப்படி வாங்குவது என்பது நாங்கள்தான் முடிவு செய்வோம்.


mohan
ஆக 23, 2025 19:20

இந்தியா புது பிக்க தக்க ஆற்றலில் சிறந்து விளங்குகிறது. ஜெர்மன் போல் , நெடுஞ்சாலைகளில் , மின்சார கம்பிகள் அமைத்து, ரயில் போல இயங்க செய்யலாம். வெளிநாட்டு கரண்சி மிச்சமாகும். இந்தியா விவசாய நாடு . மிக அதிக அளவில் , பயோ டீசலுக்கான , விதைகளை உற்பத்தி செய்து , உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கலாம். விவசாயிகள், லாபமடைவர்.


Sundar R
ஆக 23, 2025 18:30

ஜெய்சங்கர் அவர்கள் நம் நாட்டின் கருத்துக்களை அமெரிக்காவிடம் உலக நாடுகள் அறியும் வகையில் தைரியமாக கூறுகிறார். மோடி , ஜெய்சங்கர் இந்த சிக்கலான விஷயத்தை லாவகமாக கையாளுகிறார்கள். நம் நாடு பெரிதாக வளர்ந்து விட்டது. இனிமேல் எந்த நாட்டையும் சாராமல், எல்லா உற்பத்திகளையும் நம் நாட்டிலேயே MAKE IN INDIA மூலம் செய்து நமது நாட்டு மக்களுக்கு தேவையானதையும், அதற்கும் மேலான உற்பத்தியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக வருமானத்தை பெற முயற்சிக்க வேண்டும். அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கு பத்து வருடங்கள் ஆகும் என்றால், அதை புத்திசாலித்தனமாக ஐந்து வருடங்களிலேயே முடித்துவிட வேண்டும். அப்போது தான் நம் நாட்டு மக்கள் எதிர்வரும் காலங்களில் நலமுடன் வாழ முடியும்.


சிட்டுக்குருவி
ஆக 23, 2025 17:47

ஆண்டிக்கு எதுக்கு அம்பாரம் கணக்கு என்பதுபோல அவரவர் நாட்டிற்கு ஏற்றாற் போல் வர்த்தகங்களை அமைத்துக்கொள்கின்றார்கள் .ஒருநாடு மற்றநாடு என்ன வர்தகம் செய்யலாம் என்ன வர்தகம் செய்யக்கூடாது என்பதைகூற வேறு எந்த ஒரு நாட்டிற்கும் உரிமையில்லை .உக்கிரனுக்கும் ரஷ்யாவுக்கும் விரோதத்தை ஏற்படுத்தி உறவைக்கெடுத்து போரை ஏற்படுத்தியதே அமெரிக்காதான் . உக்ரைனை ரஷ்யாவிடமிருந்து காப்பாற்றுவதைப்போல ஒரு மாயையை ஏற்படுத்தி உக்கிரனுக்கு அழிவை ஏற்படுத்திவிட்டு இப்போது பழியை வேறு ஒரு நாட்டின்மீது திருப்பிவிட முயற்சிப்பது என்ன நாடகம் .உக்கிரனின் அதிபரை தன் கைபொம்மையாக்கி விட்டார்கள் .அவர் இஞ்சி தின்ற குரங்கைப்போல துப்பவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் விழித்துகொன்டு இருக்கின்றார் . உக்ரைனியன் அதிபர் முதலிலேயே ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால் இவ்வளவு மக்களுக்கு அழிவை ஏற்படுத்தி இருக்காது . இப்போது என்ன நடக்கபோகின்றதோ அதேதான் அப்போதும் நடந்திருக்கும் . அழிவுகள் ,மனித இழைப்பீடுகள் மிஞ்சி இருக்கும் .அமெரிக்கா என்ற அரசனை நம்பி ரஷ்யா என்ற புருஷனை கைவிட்டகதை .ரஷ்யாவை சுற்றி எத்தனையோ ஜனநாயக நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன .அவைகள் எல்லாம் பாதுகாப்பாக தானே இருக்கின்றன .சரித்திரத்தை ஆழ்ந்து புரட்டிப்பார்த்து உலகமக்களுக்கு தெளிவு படுத்தி அனைத்துநாடுகளும் ஒன்றோடு ஒன்று ஒற்றுமையாக இருக்கும் வழியில் பயணித்திடவேண்டும். அமெரிக்கர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஜனநாயகம் இல்லை என்பர்.பிடித்துவிட்டால் எல்லாமே ஜனநாயகம் என்பர்கள் .


Priyan Vadanad
ஆக 23, 2025 15:19

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இந்தியா வாங்குகிறது அல்லது இந்தியருள் ஒருவர் இருவர் வாங்குகிறீர்களா? கட்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் செயலை இந்தியா செய்கிறதா அல்லது தனியார் செய்கிறார்களா? சுத்திகரிக்கும் ஆலைகள் இந்தியாவில் எங்கெங்கு உள்ளன? இதனால் இந்தியாவுக்கு எவ்வளவு வருமானம்? தனியாருக்கு எவ்வளவு வருமானம்? இந்த விபரங்களையும் கூறியிருக்கலாம். ,


ஆரூர் ரங்
ஆக 23, 2025 16:34

அரசுத்துறை நிறுவனங்கள் உட்பட எல்லா சுத்திகரிப்பு நிறுவனங்களும் ரஷ்யாவிடம் வாங்குகிறார்கள். அதில் இரண்டு தனியார் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல், உப பொருட்களை ஏற்றுமதியும் செய்து பலருக்கு வேலைவாய்ப்பும் அரசுக்கு பெருமளவில் வரியும் அளிக்கின்றனர்.


பெரிய குத்தூசி
ஆக 23, 2025 16:48

அரைவேக்காடு ராகுல் போன்று குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள். தேசப்பற்றோடு தொலைநோக்கு பார்வையோடு இதை அணுகவும்.அமெரிக்காவின் அரசியலை புரிந்துகொண்டு கருத்துக்களை பகிருங்கள். எண்ணை சுத்திகரிப்பு என்பது சேவை அடிப்படையிலானது.உங்களால் முடிந்தால் சுத்திகரிப்பு ஆலையை ஆரம்பிக்கவும். உங்களிடம் சுத்திகரிப்பு ஆலை இருந்தால் புடின் உங்களுக்கும் கச்சா எண்ணையை தருவார்.இந்திய அரசாங்கத்திற்கு உண்டான வரியை செலுத்தி விட்டு நீங்களும் சுத்திகரித்து எண்ணையை உலகம் முழுவதும் விற்கலாம். சிந்தனையை மாற்றுங்கள், மாறாவிடில் வருடம் 100 ஆனாலும் தமிழ்நாடு உருப்படாது.


Gopal,Sendurai
ஆக 23, 2025 16:57

இங்கிருக்கும் வரையில் வாலை சுருட்டிக் கொண்டு இரு இல்லாவிட்டால் பேசாமல் வாடிகனுக்கு போய்விடு...


vivek
ஆக 23, 2025 17:01

அதை தெரிஞ்சு நீ என்ன எண்ணெய் வாங்கி வடை சுட போராயா ...இருநூறுஉனக்கு அதிகம்


vivek
ஆக 23, 2025 17:27

அறிவிலி இருநூறு சொம்பு ...எதுக்கு உனக்கு சொல்லணும்


Balamurugan
ஆக 23, 2025 18:09

தனியார் நிறுவனமாக இருந்தால் என்ன? இந்திய நிறுவனம் தானே? இந்தியாவுக்குள்ளே தானே இருக்குது?


Tamilan
ஆக 23, 2025 15:16

தங்களின் உலகளாவிய கொள்ளைகளுக்கு துணைபோகவில்லையென்றால் சேற்றை வாரி இறைப்பது ஒரு நாட்டுக்கோ அரசுக்கோ இந்துமதத்திற்க்கோ நல்லதல்ல


Kumar Kumzi
ஆக 23, 2025 16:23

பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா தமிழன் பதுங்கியிருக்கான் ஹாஹாஹா


vivek
ஆக 23, 2025 17:28

உம்மை போல இந்து மத போர்வையில் வரும் சாத்தான்களுக்கு இங்கு இடம் இல்லை


Raman
ஆக 23, 2025 18:38

You are certainly not true Indian ..your comments reflect your poor mindset..you guys better leave this country and settle elsewhere where you would ? be welcome


Kannuchamy Maths
ஆக 23, 2025 15:13

நமது தேசத்தின் மீது நீங்களும், உங்கள் அமைச்சர் சகாக்களும் மற்றும் மாண்புமிகு பிரதம மந்திரி மோடி அவர்களும் எடுக்கின்ற தேச நலன் சார்ந்த முடிவுகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நன்றி


Priyan Vadanad
ஆக 23, 2025 15:10

நாகரீகமாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் சொல்லப்பட்ட அழகான, வலிமையான கருத்து.


சாமானியன்
ஆக 23, 2025 15:07

சார், நீங்கள் ஒன்று நினைத்தால் அமெரிக்கா வேறு மாதிரி நினைக்கின்றதே. சீனாவை முழுமையாக நம்பக்கூடாது. நமது வெளியுறவுக்கொள்கை நமது தேசநலன் சார்ந்திருக்க வேண்டும் என்பது மிகச்சரியான நிலை.


Suresh Velan
ஆக 23, 2025 14:49

சூப்பரோ சூப்பர் ஜெய் சங்கர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை