உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை: உடல்நலம் தேறி வருகிறார்

ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை: உடல்நலம் தேறி வருகிறார்

புதுடில்லி: கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதையடுத்து டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளையில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ilcbyst2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தப்பட்டதால் கடந்த 17-ம் தேதி மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சத்குரு உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டு, சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன..இதற்கிடையே அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.முன்னதாக மருத்துவர்கள் கூறுகையில் 'சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத்தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார்' .என்று கூறினர்மேலும் சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார். என்றனர்.சத்குரு விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாக பிரதமர் மோடி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

சத்குருவிடம் நலம் விசாரித்த மோடி!

மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறிவரும் ஈஷா யோகா நிறுவனர் சத்குருவிடம் பிரதமர் மோடி போனில் பேசி நலம் விசாரித்தார். விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

meenakshisundaram
மார் 21, 2024 06:05

அவரின் அறிவுத்திறன் மேலை நாட்டவரும் வியக்கும் வண்ணம் உள்ளது .வளம் நலம் விரைவில் அடைய வேண்டும் அனைவரின் பிரார்த்தனையும் .


Sathyasekaren Sathyanarayanana
மார் 21, 2024 04:55

என்னை போன்ற சாதரண ஹிண்டுவிற்கு நமது மதத்தின் நுட்பங்களை தெளிவாக புரிந்துகொண்டு பெருமை கொள்ள வைத்தவர். ஒரு சிறந்த உதாரணம், ஸ்ரீ ராமர் ஏன் கொண்டாடப்படவேண்டியவர் என்று அவர் சொன்ன விளக்கங்கள் அருமை. அதே போல் கோவில்கள் எதற்க்காக உருவாக்கப்பட்டன என்று. அருமையாக சொன்னார். அவர் மீண்டு பூரண உடல்நலத்துடன் வர பிராத்திக்கிறேன்.


Ramesh Sargam
மார் 20, 2024 23:47

அவருடைய கோவை ஆசிரமத்திலேயே மருத்துவமனை உள்ளதே அங்கே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வைத்தியம் இல்லையா? மேலும் கோவையில் இல்லாத மருத்துவமனைகளா? இல்லை, சும்மா கேட்கிறேன். அவ்வளவுதான்.


Sundar
மார் 20, 2024 23:14

Get well soon Sadhguru. Our prayers are with you always ????????


ganesha
மார் 20, 2024 22:08

Get well soon ????????


Bala
மார் 20, 2024 21:43

சத்குரு இந்தியாவின் பொக்கிஷம். விரைவில் நலம் பெற்று முன்னைப் போல் முனைப்புடன் செயல்பட வேண்டும்


Bye Pass
மார் 20, 2024 21:03

சிவராத்திரி தாண்டவத்தின்போதே சந்தேகம் வந்தது


Barakat Ali
மார் 20, 2024 20:51

overdose?


naranam
மார் 20, 2024 20:12

நலம் பெற வாழத்துகள்!


இந்துத்தமிழன்
மார் 20, 2024 19:22

விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை