உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு: நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு: நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜேஇஇ மெயின் தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை(என்டிஏ) ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். 2024 - 25 கல்வியாண்டில் சேர்வதற்காக இந்த தேர்வை கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தியது. 13 மொழிகளில் நாடு முழுவதும் 319 நகரங்களில் நடத்தியது. வெளிநாட்டிலும் தேர்வு நடந்தது. முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வு முடிவினை என்டிஏ வெளியிட்டு உள்ளது.இந்த தேர்வை எழுத 11,79,569 பேர் பதிவு செய்த நிலையில் 10,67,959 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். அவர்களில் 15 பேர் தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்த தலா 14 பேர் மற்றும் டில்லியைச் சேர்ந்த 6 பேர் அடங்குவர். டில்லியைச் சேர்ந்த ஷாய்னா சிங், மாதவ் பன்சால், தான்யா ஜா, இப்சிட் மிட்டல், பவேஷ் ராமகிருஷ்ணன் கார்த்திக் மற்றும் அர்ஷ் குப்தா ஆகியோர் நூறு மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
ஏப் 25, 2024 21:46

ஐயஹோ.ஏராள வடக்கன்கள் பாஸ் செய்த JEE ஐ ஓரு தமிழ்நாட்டவர் கூட தாண்டவில்லையா ? விரைவில் ஒரே கையெழுத்தில் JEE தேர்வும் ஒழிக்கப்படும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை