உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடம்பர பொருள் வாங்கணும், ஜீவனாம்சம் ரூ.6 லட்சம் வேணும்: கேட்டதும் கொதிச்சுட்டார் நீதிபதி

ஆடம்பர பொருள் வாங்கணும், ஜீவனாம்சம் ரூ.6 லட்சம் வேணும்: கேட்டதும் கொதிச்சுட்டார் நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கணவரிடம் இருந்து செலவுக்கு மாதம் ரூ.6,16,300 ஜீவனாம்சம் பெற்றுத்தர கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்ணிடம், 'தனியாக வாழும் உங்களுக்கு இவ்வளவு செலவுகள் தேவையா, பணம் வேண்டுமென்றால் சம்பாதித்துக்கொள்ளுங்கள்' என நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.கணவரிடம் இருந்து விவாகரத்து கோரும் மனைவி, தன்னுடைய மற்றும் தன் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காக அடிப்படை தேவைகளை கணக்கிட்டு, குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சம் கேட்பது இயல்பானது. மனைவி கேட்கும் தொகையை அப்படியே கொடுக்க நீதிமன்றமும் சம்மதிக்காது. மனைவியின் கோரிக்கையில், அடிப்படை தேவைகளுக்கான தொகை, கணவரின் சம்பளம் ஆகியவற்றை கணக்கிட்டு குறிப்பிட்ட தொகையை ஜூவனாம்சம் கொடுக்க உத்தரவிடும்.ஆனால், கர்நாடகாவை சேர்ந்த ராதா முனுகுந்தலா என்ற பெண், தனக்கு மாதம் ரூ.6,16,300 ஜீவனாம்சம் வழங்க தன் கணவருக்கு உத்தரவிடக்கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 20ல் விசாரணைக்கு வந்தபோது, பெண்ணின் மனுவை பார்த்து நீதிபதி அதிர்ச்சியடைந்தார். இவ்வளவு தொகையை கேட்பது என்ன நியாயம் எனக் கேட்ட நீதிபதியிடம், பெண்ணின் தரப்பு வழக்கறிஞர், ரூ.6,16,300-ஐ நியாயப்படுத்தும் விதமாக செலவுகளை பட்டியலிட்டார்.

செலவு கணக்கு

அதன்படி, 'செருப்பு, ஆடைகள், வளையல் மற்றும் மற்ற பொருட்கள் வாங்க மாதம்தோறும் ரூ.15 ஆயிரமும், வீட்டில் உணவு சமைத்து சாப்பிட ரூ.60 ஆயிரமும், உணவகம் உள்ளிட்ட வெளி இடங்களில் உணவுக்கு சில ஆயிரங்களும், முழங்கால் வலி மற்றும் பிசியோதெரபி சிகிச்சை, மருத்துவ செலவுக்கு ரூ.4 முதல் 5 லட்சமும் என மாதத்திற்கு ரூ.6,16,300 தேவைப்படுகிறது. அந்த தொகையை கணவர் வழங்க வேண்டும்' என ராதா தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.இதனை கேட்டதும் கோபமடைந்த நீதிபதி, ''குடும்ப பொறுப்புகள் எதுவுமின்றி தனித்து வாழும் பெண்ணுக்கு இவ்வளவு செலவுகள் தேவையா? அவருக்கு பணம் வேண்டுமென்றால், சம்பாதிக்க சொல்லுங்கள். கணவரிடம் இருந்து இதனை எதிர்பார்க்க வேண்டாம். உங்களின் அடிப்படை தேவைக்கு மட்டும் என்ன பணம் வேண்டுமோ அதனை கேளுங்கள்.

எச்சரிக்கை

பெண்ணிடம் சண்டையிட்டு பிரிந்ததற்காக இவ்வளவு பணத்தை தர வேண்டும் என்று கணவருக்கு தண்டனை தர முடியாது. கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும்,'' என எச்சரித்தார். வழக்கு வாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Rasheel
ஆக 23, 2024 12:22

கேடுகெட்ட கலாசாரம். இந்த பணத்திற்காகவே திருமணம் செய்து ஜீவனாம்சம் வாங்குவது போல செருப்பு, உடை வாங்க மாதம் 60 ஆயிரம். நாடு எங்கே போகிறது


S.Mohana Sukumar
ஆக 23, 2024 01:57

ஆர்பிஐ அச்சடிக்கும் பணம் முழுவதையும் கேட்டிருக்கலாமே?


S.Mohana Sukumar
ஆக 23, 2024 01:54

ரஃபி வங்கி அடிக்கும் பணம் முழுவதும் வேண்டும் என்று கேட்டிருக்கலாமே?


Akash
ஆக 22, 2024 23:52

4-5 lakhs for medical ...out of 6.16 lakhs...how can judge deny that and get angry?


அப்பாவி
ஆக 22, 2024 21:57

நீதிபதிகள் உணர்ச்சி வசப்படக் கூடாது. சட்டம் என்ன சொல்குறதோ அதன்படி தீர்ப்பு மடும் வாசிக்கணும். சுப்ரீம் கோர்ட் கூட நேத்திக்கிதான் அறிவுரை சொல்லுச்சு. இந்த நீதிபதி என்ன இவரோட கையிலிருந்து பணம் குடுக்கப்போறாரா?


Ramesh Sargam
ஆக 22, 2024 20:42

போகிறபோக்கை பார்த்தால், ஒரு சில கறார் பெண்கள், திருமணத்திற்கு முன்பே எனக்கு இவ்வளவு பணம் ஜீவனாம்சம் என் வங்கிக்கணக்கில் போடவும் என்று கட்டளையிடுவார் போல தெரிகிறது. இனிவரும் காலங்களில் ஆண்கள் பாடு திண்டாட்டம்தான்.


Ramesh Sargam
ஆக 22, 2024 19:52

தனியார் நிறுவனங்களில் பணிசெய்து ஓய்வு பெரும் ஆண்களுக்கு மாத ஓய்வூதியம் மற்ற அரசு பணியாளர்களுக்கு கிடைப்பதுபோல கிடைப்பதில்லை. அவர்கள் ஒன்று அரசு பணியில் இருக்கும் அல்லது பணி ஓய்வு பெற்ற மனைவிமார்களை நம்பியும், பெற்ற பிள்ளைகளை நம்பிபும் வாழவேண்டி இருக்கிறது. அப்படி ஓய்வு பெரும் ஆண்கள், அவர்கள் மனைவிடமிருந்தும், பெற்ற பிள்ளைகளிடமிருந்தும் சொல்லொணாத்துயரங்களை அடைகிறார்கள். கொடுமை தாங்காமல் அவர்கள் ஒருவேளை விவாகரத்து கோரி நீதிமன்றத்திடம் முறையிட்டால், அவர்களுக்கு வசதி உள்ள மனைவிமார்கள் ஜீவனாம்சம் கொடுப்பார்களா? நீதிமன்றம்தான் பெற்றுத்தருமா?


THINAKAREN KARAMANI
ஆக 22, 2024 19:42

ஒரு இந்திய குடும்பத்திற்கு உணவு, உடை, இருப்பிடம் இவற்றிற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சமாகத் தரவேண்டும். அத்யாவசிய செலவுக்குத்தான் தரவேண்டுமே தவிர ஆடம்பரத்துக்கு அல்ல. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


Kasimani Baskaran
ஆக 22, 2024 18:59

வேலை செய்யாமல் வாழவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் சட்டம் அதற்குத்தான் துணை போகும். எனது தோழர்கள் சிலர் சம்பளத்தில் பாதியை ஜீவனாம்சமாக கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


Mohana Sundaram
ஆக 22, 2024 17:57

From claims it is understand, marriage and then diverse for the purpose of collecting wealth only. Honorable judge handled the case with justice.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை