உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சங்கராச்சாரியாரையும் விட்டு வைக்காத கங்கனா: ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக கருத்து

சங்கராச்சாரியாரையும் விட்டு வைக்காத கங்கனா: ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் நடந்துள்ளதாக கூறிய ஜோதிர்மட சங்கராச்சாரியாருக்கு பதிலளித்துள்ள பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்மட சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி சுவாமிகள், சமீபத்தில் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிறகு அவர் கூறுகையில், துரோகம் செய்வது பெரிய பாவங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேவுக்கும் துரோகம் நடந்துள்ளது. அவர் எதிர்கொண்ட துரோகத்தால் அனைவரும் வேதனை அடைந்தோம். வஞ்சகம் செய்பவர் ஹிந்துவாக இருக்க முடியாது. அதனை பொறுத்துக் கொள்பவனே ஹிந்து. இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக கங்கனா ரணாவத், எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அரசியலில் கூட்டணி அமைப்பது , ஒரு கட்சியில் பல பிரிவுகள் இருப்பது பொதுவானதும், அரசியலமைப்புக்கு உட்பட்டதும் ஆகும். காங்கிரஸ் கட்சியும் 1907 மற்றும் 1971 ல் பிளவுபட்டது. ஒரு அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானிபூரி விற்பனை செய்வாரா? ஓர் அரசனே குடிமக்களை சுரண்ட துவங்கினால், துரோகம் தான் இறுதி வழி என நம் மதம் கூறுகிறது. சங்கராச்சாரியார் தனது வார்த்தைகளையும், செல்வாக்கையும் தவறாக பயன்படுத்தி உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சித்து நமது உணர்வுகளை புண்படுத்தி விட்டார். இதுபோன்ற விமர்சனங்கள் மூலம் ஹிந்து மதத்தை அவமதித்து உள்ளார். இவ்வாறு அந்த பதிவில் கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

TAMIZ JOSH
ஜூலை 20, 2024 09:27

அழைத்து வந்த தே, அந்த பெயரை கங்கனா வ்வுகு வழங்கலாமா?


Kanns
ஜூலை 19, 2024 09:20

ShortCut Stooge Power-Grabbing Heroine Lecturing on Dharma Without Any Working for People & Dharma


Nandakumar Naidu.
ஜூலை 19, 2024 00:41

கங்கனா பேசியது தவறில்லை. உண்மையான த்ரோகி உத்தவ் தாக்கரே தான். பதவி வேண்டும் என்பதற்காக இவனுக்கு வாக்களித்த ஹிந்துக்களுக்கு த்ரோகம் செய்துவிட்டு ஹிந்து விரோத கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சிகளுடன் கூட்டணி வைத்தது இவன் தான். இவனுக்கு ஆதரவாக அந்த காவி பேசியுள்ளார் என்றால் அவர் ஹிந்துக்கள் போர்வையில் பதுங்கி இருக்கும் ஹிந்து விரோதி என்பதைத்தான் கங்கனா ரனாவத் பேசியுள்ளார்.


Chakkaravarthi Sk
ஜூலை 18, 2024 18:55

கங்கணா என்ன தவறு செய்தார்? அவர் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர், பேசுவது சரி தான்


R.Varadarajan
ஜூலை 18, 2024 16:55

உயர் நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்ணி ஆட்சிக்கு வந்திருந்தால் இவரும் ராஜ்ய சபையில் இடம் பெற்றிருப்பாரோ ?


ganapathy
ஜூலை 18, 2024 16:35

நமது மதத்திற்கு எப்போதுமே கெட்டபெயரும் தவறான வழிகாட்டல்களும்தான் கிடைக்கும்.


mindum vasantham
ஜூலை 18, 2024 15:35

இவர் காங்கிரஸ் கட்சி காரர்


Rajamani K
ஜூலை 18, 2024 15:34

ஆச்சாரியார் அரசியல் பேசுவது ஆதி சங்கரருக்கு இழைக்கும் துரோகம் இல்லையா ??


Sankara Subramaniam
ஜூலை 18, 2024 15:21

அரசியல் மத மாற்றம் கட்ட பஞ்சாயத்து பரிவர்த்தனை வக்காலத்து எல்லாம் அவர்களது தகுதி மரியாதைக்கு அப்பாற்பட்டதாகும்.


manoj
ஜூலை 18, 2024 15:14

Madam statement is very correct.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை