உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் கர்நாடக பவன் உ.பி., அரசுக்கு அமைச்சர் கடிதம்

அயோத்தியில் கர்நாடக பவன் உ.பி., அரசுக்கு அமைச்சர் கடிதம்

கலபுரகி,- “அயோத்தியில் கர்நாடக பவன் கட்டப்படும். இதற்காக, 4 ஏக்கர் நிலம் வழங்கும்படி, உத்தர பிரதேச அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது,” என, மாநில ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ராமரை தரிசிக்க அயோத்திக்குச் செல்லும் கர்நாடக பக்தர்களின் வசதிக்காக, கர்நாடக பவன் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கு முன்பு பா.ஜ., அரசில், பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, அயோத்தியில் கர்நாடக பவன் கட்ட இடம் வழங்கும்படி, உத்தர பிரதேச முதல்வருக்கு கடிதம் எழுதினார். தற்போது நானும் கூட, 4 ஏக்கர் நிலம் கேட்டு கடிதம் எழுதினேன்.நிலம் கிடைத்த பின், கர்நாடக அரசு செலவில் கர்நாடக பவன் கட்டும் பணிகள் துவக்கப்படும். இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை