உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா முதல்வர் தர்ணா

மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா முதல்வர் தர்ணா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவிற்கு மத்திய அரசு ஒதுக்கிய வறட்சி நிவாரண நிதி போதுமானது அல்ல எனக்கூறி அம்மாநில முதல்வர் சித்தராமையா தர்ணாவில் ஈடுபட்டார்.சட்டசபை வளாகத்தில் காந்தி சிலை முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கைகளில் தண்ணீர்க்குவளையையும், செம்மையும் ஏந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டனர். முன்னதாக நிருபர்களிடம் பேசிய சித்தராமையா கூறியதாவது: தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிகளின்படி கர்நாடகாவிற்கு மத்திய அரசு ரூ.18,171 கோடி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், வறட்சி நிவாரண நிதியாக வெறும் ரூ.3,498 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கு போதுமானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
ஏப் 29, 2024 13:14

பது வருஷமா ஒண்ணும் மாறலை. ஆனா மார் தட்டிக் கொள்வதில் ஒண்ணும் குறைச்சலில்லை.


A1Suresh
ஏப் 28, 2024 23:18

ரேவந்த் ரெட்டி உங்களுக்கு எதிராக பேட்டி தந்து விட்டார் பாஜக மிகச் சரியாக மாநிலத்திற்கு ஒத்துழைக்கிறது என்று தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வரே சொல்லிவிட்டார் எனவே உங்கள் நாடகம் சந்தி சிரிக்கிறது


A1Suresh
ஏப் 28, 2024 23:01

இனி பிரயோஜனமில்லை அடுத்த என்டிஏ ஆட்சிக்காலத்தில் செம்மையாக கவனிப்பார்கள்


Ramesh Sargam
ஏப் 28, 2024 21:05

கொடுத்த நிதியில் என்ன செய்தீர்கள்? கணக்கு காட்ட முடியுமா சித்து?


Apposthalan samlin
ஏப் 28, 2024 18:15

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள் gst ரூபாய்க்கு பைசா மட்டும் திருப்பி கொடுத்தால் என்ன லாபம் ? இப்படியே போனால் ஒவொரு மாநிலமும் ஒவொரு நாடு கேட்கும் அவலம் வந்து விடும் பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி நியாயம் வேண்டாமா ?


Bala Paddy
ஏப் 28, 2024 16:48

கொஞ்சம் வெயிட் பண்னுங்கள் கெஜ்ரியை அடுத்தது நீங்கதான்


குமரி குருவி
ஏப் 28, 2024 16:31

தமிழக முதல்வர் எங்கப்பா போனார்..மெரீனா கடற்கரை பக்கம் போகலாமே..


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை