உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா பிரச்னைக்கு சோனியா, ராகுலுடன் ஆலோசித்து முடிவு: கார்கே

கர்நாடகா பிரச்னைக்கு சோனியா, ராகுலுடன் ஆலோசித்து முடிவு: கார்கே

புதுடில்லி: '' கர்நாடகா அரசியல் பிரச்னைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ராகுல் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. அண்மையில் டில்லி சென்ற சிவகுமார் ஆதரவாளர்கள், முதல்வர் மாற்றம் குறித்து கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இரு தரப்பு ஆதரவாளர்களும் டில்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: மாநில அரசு என்ன செய்கிறது என்பதை கர்நாடக மக்கள் தான் சொல்ல முடியும். அங்குள்ள பிரச்னைகளை சரி செய்வோம்.ராகுல், சோனியா, நானும் அமர்ந்து விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். தேவைப்பட்டால் தலையிட்டு தீர்வு காண்போம். பீஹார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாளை(நவ.,27) மறுஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளோம். நாளை அனைத்து தகவல்களையும் சேகரித்து, எங்கே, என்ன தவறுகள் நடந்தன என்பதைக் கண்டுபிடிப்போம். ஓட்டுத் திருட்டு நடந்துள்ளது என்பது உண்மைதான். எஸ்ஐஆரில் பல குறைபாடுகள் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திலும் குறை உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும் தவறாக பயன்படுத்துகிறது. தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

MARUTHU PANDIAR
நவ 27, 2025 00:05

அப்போ மேலிடம் மேலிடம்ன்னு சொல்றாங்களே அது நீரா இத்தாலி குடும்பமா மொதல்ல அத சொல்லும்


தாமரை மலர்கிறது
நவ 26, 2025 23:52

கலந்து ஆலோசித்து காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுவது நல்லது.


M Ramachandran
நவ 26, 2025 21:01

நீ ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்பதை தெளிவு படுத்தியாச்சி.


Thravisham
நவ 26, 2025 21:01

அவங்கள நீ எதுக்கு கேக்கணும்? எலிக்கு தலையாய் இருப்பதுதான் ஒனக்கு பிடிக்கும் போல


பேசும் தமிழன்
நவ 26, 2025 19:33

கான் கிராஸ் கட்சி வெற்றி பெற்றால்.... ஓட்டு பதிவு இயந்திரம் நன்றாக வேலை செய்கிறது.... அதே எதிர்கட்சி ஆட்கள் வெற்றி பெற்றால்.... ஓட்டு பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்று புலம்ப வேண்டியது..... உங்களுக்கு இதே வேலையாக போய் விட்டது.... ஆமாம் உங்கள் இத்தாலி குடும்ப உறுப்பினர்கள் மேடம் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள்..... மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வில்லையா ???... கர்நாடகா.... தெலுங்கானா மாநிலங்களில் எப்படி வெற்றி பெற்றீர்கள்..... தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்றீர்களா ??


ரத்தினம்
நவ 26, 2025 19:15

வெட்கமே இல்லையா ?


சிந்தனை
நவ 26, 2025 19:03

அவசியமா அவங்க ரெண்டு பேரு கிட்டயும் கேளுங்க அப்பதான் காங்கிரசுக்கு சமாதி கட்ட முடியும்


Modisha
நவ 26, 2025 18:39

பிரச்சனையே இல்லை என்று சொன்ன ஞாபகம்.


R SRINIVASAN
நவ 26, 2025 18:25

This man previously said high command will decide on CM issue. Now he says Rahul and Sonia will decide. Then why is he calls himself president? Who is the high command?


cpv s
நவ 26, 2025 18:02

congress won in karnataka , that is for voter machine error, so first dismiss your government in karnataka


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை