உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிக்கெட் வழங்காமல் போனில் அரட்டை: கர்நாடக ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட்

டிக்கெட் வழங்காமல் போனில் அரட்டை: கர்நாடக ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு:கர்நாடகாவில், நீண்ட வரிசையில் பயணியர் காத்திருப்பதை பற்றி கவலைப்படாமல், 'மொபைல் போனில்' அரட்டை அடித்த ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கர்நாடகாவில் உள்ள யாத்கிர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கிளர்க்காக பணியாற்றுபவர் மகேஷ். இவர் பணியில் இருந்தபோது டிக்கெட் வழங்காமல் மொபைல் போனில் அரட்டை அடித்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அதில், டிக்கெட் கவுன்டர் முன் ஏராளமான பயணியர் ரயில் டிக்கெட் பெற நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், கிளர்க் மகேஷ் அவர்களை பற்றி கவலைப்படாமல் இருக்கையில் அமர்ந்தபடி யாருடனோ மொபைல் போனில் அரட்டை அடித்து கொண்டிருந்தார். இதனால் வரிசையில் காத்திருந்தவர்கள், 'டிக்கெட் கொடுங்கள், ரயில் வந்துவிடப்போகிறது' என கூறியபடி கொந்தளித்தனர். இதையடுத்து பயணி ஒருவர் கிளர்க் அருகே சென்று, 'டிக்கெட் கொடுங்க' என, கூறுகிறார். ஆனால் அப்போதும், 'ஒரு நிமிஷம் காத்திருங்க வர்றேன்' என கூறியபடி போனில் அரட்டையை தொடர்கிறார். இவ்வாறு, 15 நிமிடங்களுக்கு மேல் அவர் போனில் தொடர்ந்து பேசுகிறார். இதனால் பயணியர் ஆவேசமடைந்து சத்தமிட்டதால், வேறு வழியின்றி போன் இணைப்பை துண்டித்துவிட்டு கிளர்க் டிக்கெட் வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. கிளர்க் மகேஷ், பணி நேரத்தில் டிக்கெட் வழங்காமல் போனில் பேசும் வீடியோவை பதிவு செய்த பயணி ஒருவர், அதை ரயில் நிலைய அதிகாரிக்கு வாட்ஸாப்பில் அனுப்பினார். இதன்படி தென் மத்திய ரயில்வேயின் குண்டக்கல் டிவிஷன் அதிகாரிகள், பணியில் அலட்சியமாக இருந்த கிளர்க் மகேஷை சஸ்பெண்ட் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Subash BV
ஆக 01, 2025 17:27

Understand why telling doing business is not GOVTS business. Had it been private, we can cancel agency licence. THINK SERIOUSLY.


மொட்டை தாசன்...
ஆக 01, 2025 15:36

இவனுங்களுக்கு வக்காலத்து வாங்க யூனியன் ஆட்கள் உடனே வந்து சஸ்பெண்ட் செய்த உத்தரவை வாபஸ் பேரவைத்துவிடுவார்கள்.


V RAMASWAMY
ஆக 01, 2025 10:49

இவர்களை சஸ்பெண்ட் செய்யாமல், பணி நீக்கம் செய்து ஒய்வூதியம் முதலியவற்றையும் நிறுத்தி தண்டனை அளிக்கப்படவேண்டியது அவசியம். மத்திய அல்லது மாநில அரசு பணி என்றால் ஆணவமும், அதிகாரமும் கொண்டு வேலை செய்யாமல் லஞ்சம் மட்டும் வாங்கிக் கொண்டு குறைந்த வேலை அதுவும் சரிவர செய்யாமல் இருக்கலாம் என்கிற நிலைமை மாறவேண்டும். மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது அநியாய செயல்.


AMMAN EARTH MOVERS
ஆக 01, 2025 09:22

இந்தியா முழுவதும் இந்த பீடா வாயன்கள் பண்ணும் அட்ராசிட்டி கள் தாங்க முடியல


vijay
ஆக 01, 2025 10:39

மகேஷ்....என்பவர் முழு பெயர் தெரிந்தால்தான் பீடா வாயனா? இல்லையா, என்று சொல்ல முடியும். என்னமோ, தமிழ்நாட்டுல வேலை செய்யிறவங்க எல்லாம் அப்படியே பக்காவா வேலை பண்ணுறாங்க போல காட்டிக்காதீங்க, மாநில அரசு அலுவலகங்களில் எப்படி வேலை பண்ணுறாங்கன்னு பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். ஒழுங்கா வேலை பார்க்கிறவங்களும் இருக்காங்க. எதற்கெடுத்தாலும் வடக்கன், தெற்கன், பீடா வாயன், நாறவாயன் என்று புலம்பல் உள்ளூர், அதான்பா நம்ம தமிழ்நாட்டு அரசு அலுவலகங்கள், சுற்றுப்புறங்கள் சுத்தமா வச்சிருக்கோமா, லஞ்சம் வாங்காமல் வேலை செய்யறோமோ என்று பாருங்க.


Ramesh Sargam
ஆக 01, 2025 09:11

Let him be given Guard Post in a Goods Train, so that he can talk continuously all alone in his small metal room.


Senthoora
ஆக 01, 2025 11:49

எதுக்கு அங்கேயும் விபத்து உண்டாக்கவோ?


VSMani
ஆக 01, 2025 09:09

எத்தனையோ பேருக்கு கிடைக்காத நல்ல அரசு வேலை கிடைத்திருக்கிறதே அதை எவ்வளவு நேர்த்தியாக செய்தால் மக்கள் எவ்வளவாய் பாராட்டுவார்கள். எத்தனையோ பயணிகள் வரிசையில் கால்கடுக்க நிற்கும்போது, ரயில் போய்விடுமோ என்ற பதட்டத்தில் இருக்கும்போது இந்த கிளார்க் அப்படியே சீட்ல ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு அலைபேசியில் பேசுகிறார். என்ன ஜென்மமோ. கொஞ்சம்கூட பகுத்தறிவு வேண்டாமா? சவூதி அரேபியாவிலும் ஏர்போர்ட் இமிகிரேஷன் கவுண்டர்ல சவுதிகள் இப்படித்தான் பண்ணினார்கள். வெளிநாட்டினர் வரிசையில் நிற்கும்போது சவுதிகள் காவா சவுதி டீ குடிப்பதும், போனில் அதிக நேரம் பேசுவதுமாக இருந்தது. இப்போது எல்லாம் நாமாகவே ஸ்கேன் பண்ணிட்டு வெளியே வந்திரலாம். அதனால், இப்போது நிறைய சவுதிகளுக்கு வேலை போனது.


N VADIVEL
ஆக 01, 2025 08:46

நாற்காலியை சூடுபடுத்துவார்கள்.


MUTHU
ஆக 01, 2025 08:15

என்ன ஆகிவிடப்போகின்றது. ஒருமாதம் கழித்து union-காரர்கள் சஸ்பெண்டை கான்செல் செய்ய வைத்து விடுவார்கள்.


MUTHU
ஆக 01, 2025 08:13

இதிலே பெண் அரசு ஊழியர்கள் சளைத்தவர்களில்லை. காலையில் பத்து முப்பதுக்கு தான் சீட்டுக்கே வருவா. வந்துட்டு அரைமணிநேரம் போன் அரட்டை முடிந்த பின்பு தான் வேலை என்னவென்று பார்ப்பார்கள்.


நிக்கோல்தாம்சன்
ஆக 01, 2025 07:10

நல்ல நடவடிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை