உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொசுவலைக்குள் தூங்கிய கெஜ்ரிவால்: சிறையில் கிடைக்கும் வசதிகள் என்னென்ன?

கொசுவலைக்குள் தூங்கிய கெஜ்ரிவால்: சிறையில் கிடைக்கும் வசதிகள் என்னென்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திஹார் சிறையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறை எண் 2ல் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த அறையில் தனி கழிவறை வசதி உள்ளது. நேற்று இரவு கொசுவலைக்குள் அவர் தூங்கியதாக தெரியவந்துள்ளது.மதுபானக் கொள்கை முறைகேடு குறித்த வழக்கில் கைதான டில்லி முதல்வர் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து நேற்று( ஏப்.,01) மாலை 6 மணியளவில் சிறைக்குள் வந்தார். அவர் கேட்ட ராமாயணம் மற்றும் பகவத் கீதை புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.சிறையில் அவர் அறை எண் 2 ல் அடைக்கப்பட்டு உள்ளார். 1 4 *8 அடி அளவு கொண்ட அறையில் கெஜ்ரிவால் மட்டும் உள்ளார். அந்த அறையில் தனி கழிவறை வசதி செய்யப்பட்டு உள்ளது. கெஜ்ரிவாலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளதால், அறையில் அவருக்கு 4 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அறையில் சிசிடிவியும் உள்ளது.கெஜ்ரிவாலின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவரின் உடல்நலனை கருத்தில் கொண்டும் 24 மணி நேரமும் அவரது அறையில் உள்ள சிசிடிவி மற்றும் வெளியே உள்ள கேமராக்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், எந்தவித அசம்பாவிதமும் நடப்பதை தடுக்கவும், அவர் சிறைக்குள் எங்கு சென்றாலும் 4 பேர் உடன் செல்வார்கள் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு உதவி செய்வதற்காக டாக்டர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். கெஜ்ரிவால் உள்ள அறையில், டிவி வசதி உள்ளது. தலையணை, பெட்ஷீட், போர்வை வழங்கப்பட்டு உள்ளது. சிறை விதிப்படி 6 பேர் அவரை சந்திக்கலாம்.அதன்படி சந்திக்க விரும்பும் பட்டியலில், மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் 3 நண்பர்களின் பெயர்களை கெஜ்ரிவால் பரிந்துரை செய்துள்ளார். சிறைக்குள் வந்ததும், கெஜ்ரிவால் பெயரில் வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது. கேண்டீனில், பழங்கள், டூத் பேஸ்ட், சாலட், பிஸ்கட்கள் வாங்குவதற்கு இந்த கணக்கில் குடும்பத்தினர் பணம் செலுத்துவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீரிழிவு நோய் காரணமாக கெஜ்ரிவாலுக்கு வீட்டில் தயாரித்த உணவுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

முதல்முறை அல்ல

கெஜ்ரிவால் சிறையில் இருப்பது இது முதல் முறை அல்ல. 2011ல் லோக்பால் மசோதாவுக்காக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட அன்னா ஹசாரே மற்றும் பலருடன் இணைந்து கெஜ்ரிவால் கைதாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ரூ.10 ஆயிரத்திற்கான பிணைத்தொகை செலுத்த தவறியதற்காக 2014ல் கெஜ்ரிவால் இரண்டாவது முறையாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது 3வது முறையாக அடைக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Natarajan Ramanathan
ஏப் 02, 2024 18:23

பொதுவாக அட்மிஷன் அடி என்று முதுகில் லத்தியால் நாலைந்து கொடுப்பார்கள் அதை இவருக்கு கொடுத்தார்களா?


raja
ஏப் 02, 2024 17:48

நாட்டை கொள்ளை அடிகிறவனை கொசுவலைக்கு பதிலா கூவம் கரையில் வெற்றுடம்புடன் படுக்க வைக்க வேண்டும் தமிழன் ரொம்ப சந்தோஷம் படுவார்


Mohan das GANDHI
ஏப் 02, 2024 15:19

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் தப்ப்பை செய்தவன் தண்டனை பெறுவான் இந்திய அரசியலில் அனைவரும் அரிச்சந்திரங்கள் அல்ல ஊழல் அயோக்கியர்கள் என்பதே உண்மை இதை இந்திய ஓட்டுரிமை மக்கள் உணரவில்லை என்பதே வருத்தமளிக்கிறது????? இந்தியா முன்னேற மதிப்பிற்குரிய திரு மோடி ஜி தலைமையில் ஆட்சி இந்தியா முழுவதும் அமைந்தால் தான் நாடு முன்னேற வழியுண்டு


Sivagiri
ஏப் 02, 2024 14:02

எல்லாத்துக்கும் ஜிஎஸ்டி பில் போட்டு வசூல் பன்னீருங்கோ -


Narayanan
ஏப் 02, 2024 13:47

இந்த தலைவர்களின் உடல்நிலை விவரம், கைது செய்தவுடன் தெரியவருகிறது அதுவரை அவர்கள் வெளியில் இருக்கும் போது ஒன்றும் சொல்லுவதில்லை வீர வசனங்கள் மட்டுமே கேட்க முடிகிறது


Kumar Kumzi
ஏப் 02, 2024 13:37

Anna Asaare endra unmaiyaana oozhaluku ethiraaga poratta manitharidam irunthu katchiyai aattaya potta thirudan


Lion Drsekar
ஏப் 02, 2024 13:32

எதையும் நம்பவேண்டாம் எல்லாமே நாடகம் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டது அந்த பெண் இறப்பு தொடர்பாக கொலையாளிகள் சிறைச்சாலைக்கு கொண்டுவரும்போது அனைவரின் உடலமைப்பு, உடுத்திய உடை, நடை, எல்லாமே ஒரு படத்தின் ஹீரோ போன்று இருந்தது அவர்களில் ஒருவன் மீசையை முறுக்கியவண்ணம் , தாடியையும் தடவிக்கொண்டு வருவதும் கூட்டாளிகள் அனைவரின் நெற்றியிலும் குங்குமம், விபூதி சகிதம் நடந்து வந்ததைப் பார்த்தால் சிறையில் இராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று உலகமே கூறும், ஊடகங்களும் இதைத்தான் தெரியிரியமாக வெளியிட்டது ஆக இவர்களுக்கே நன்றாக துவைத்து, இஸ்திரி போட்ட உடை என்றால் சிறையிலும் முதல்வராக இயங்கும் இவர் நிலை?? மொத்தமாக நம்மை எல்லோரும் கூட்டாக சேர்ந்து கலாய்க்கிறார்கள், அவர்கள் அனைவரும் வெளியில் ஒருவொருக்கொருவர் திட்டுவது போல் திட்டிக்கொண்டாலும் தொழில் ரீதியில் எல்லா கட்சிகளும் ஒன்றுதான் ஏமாந்தது, ஏமாறுவது, ஏமாற்றப்படுவது நாம்தான் வந்தே மாதரம்


vadivelu
ஏப் 02, 2024 12:54

இறைவன் அயோக்கியர்களை தண்டிப்பான்


Ramanujadasan
ஏப் 02, 2024 12:39

வாய்க்கு வந்ததை பேசுவது, வழக்கு என்று வந்து விட்டால் வெட்கப்படாமல் மன்னிப்பு கேட்பது என்றே வாழ்ந்தவர் இவர் ஜெயிலிலேயே சில பல காலம் இருப்பது அவருக்கு நல்லறிவை தரும் என நம்புகிறேன்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை