உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., நிர்வாகியை கொன்ற 15 பேருக்கு தூக்கு!

பா.ஜ., நிர்வாகியை கொன்ற 15 பேருக்கு தூக்கு!

ஆலப்புழா : கேரளாவில் பா.ஜ., நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புடன் தொடர்புடைய 15 பேருக்கு துாக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே வழக்கில் 15 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் அம்மாநிலத்தில் இத்தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள பா.ஜ.,வின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலராக இருந்த ரஞ்சித் சீனிவாசன், 2021 டிசம்பர் 19ம் தேதி ஆலப்புழாவில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரது தாய், மனைவி, மகள் முன்னிலையில் இந்த அராஜகம் நடந்தது. போலீஸ் விசாரித்தபோது, இது அரசியல் பழி வாங்கலின் தொடர் சம்பவம் என்பது தெரிய வந்தது.

பழிக்குப்பழி

அதாவது, பிப்ரவரியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த நந்து கிருஷ்ணா என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றவர்கள் எஸ்.டி.பி.ஐ., எனப்படும் இந்திய சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். அதற்கு பழிவாங்கும் நோக்கில், எஸ்.டி.பி.ஐ., மாநில செயலர் கே.எஸ்.ஷான் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் செயலாக ரஞ்சித் சீனிவாசன் கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வந்தது.ஆலப்புழாவை சேர்ந்த நைசாம், அஜ்மல், அனுாப், முகமது அஸ்லாம், அப்துல் கலாம் சலாம், அப்துல் கலாம், சபருதீன், மன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷ்ரப் ஆகிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள், தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., அமைப்பின் உறுப்பினர்கள் என போலீஸ் கூறினர்.

வரவேற்பு

வழக்கு விசாரணை, மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடந்தது. கடந்த 20ம் தேதி தீர்ப்பு வந்தது. 15 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி அறிவித்தார். தண்டனையை 30ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். அதன்படி, 15 பேருக்கும் துாக்கு தண்டனை விதிப்பதாக நேற்று ஸ்ரீதேவி அறிவித்தார். தீர்ப்பை கேட்க 14 குற்றவாளிகள் ஆஜராகி இருந்தனர்; ஒருவர் மருத்துவமனையில் இருக்கிறார். தீர்ப்பை, பா.ஜ.,வினர் மற்றும் கொலையானவரின் குடும்பத்தினர் வரவேற்றனர்.ரஞ்சித் சீனிவாசனின் மனைவி, 'நேர்மையாக விசாரணை நடத்தி, அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுத்த அதிகாரிகளுக்கு நன்றி' என்றார்.

கொலை நடந்தது எப்படி?

கடந்த 2021 டிச., 19ம் தேதி, ஆலப்புழாவின் வெள்ளக்கிணறு என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் ரஞ்சித் சீனிவாசன் இருந்தார். 15 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. வெளிநபர்கள் யாரும் வராமல் தடுக்க 4 பேர் வீட்டை சுற்றி நின்றனர். எட்டு பேர் வீட்டுக்குள் புகுந்து, ரஞ்சித்தின் தாய், மனைவி, மகள் அலறலை பொருட்படுத்தாமல் அவர்கள் கண் முன்னால் சரமாரியாக ரஞ்சித்தை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

V GOPALAN
ஜன 31, 2024 21:16

Like temple donation, court will collect Rs.10001 from killers and will leave them on bail to produce children for future


DVRR
ஜன 31, 2024 15:42

It is all for tom toming today? The death punishment for 15 is given by district sessions court. Tomorrow they will go to High Court with Kapil Saibal and they will take 10 years and till then they will be freely roaming on bail like Pappu and Sonia. Then it will come as 10 years jail. They will go to Supreme court and result will be same as above 20 years case will be pulled, in between some will die natural death...no result.


anbu
ஜன 31, 2024 15:06

சாதிக் பாட்சா கொலை வழக்கு ஏன் நீர்த்துப் போனது?


mei
ஜன 31, 2024 14:34

முஸ்லீம்கள் இந்துக்களை முழுமையாக அழிப்பதற்குள் இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்


Rajathi Rajan
ஜன 31, 2024 13:51

APADIYE குஜராத்தி CASEKU ORU NALLA THERPPAI SOLLIDUNGA EJAMAANEY....


பேசும் தமிழன்
ஜன 31, 2024 18:45

கண்டிப்பாக.... குஜராத்தில் ரயில் பெட்டியோடு சேர்த்து... மனிதர்களையும் எரித்து கொன்ற பாவிகளுக்கும் இதே போன்ற கடுமையான தண்டனை தர வேண்டும்.


S.kausalya
ஜன 31, 2024 13:18

ஷான் என்பவரை ஏன் கொலை செய்தார்கள்? அதற்கு முன் நந்து கிருஷ்ணா என்பவரை கொலை செய்தது யார்? அதன் விளைவு தான் ஷான் கொலை. நந்து பற்றி பேசாமல், ஷான் பற்றி மட்டும் ஏன் பேச வேண்டும்?


duruvasar
ஜன 31, 2024 13:03

ரஞ்சித் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு கொலையானார் என்று வாதாட கபில்சிபல் ஆஜராகி விடுவார். இல்லையென்றால் துஷ்யந் தவே ரெடியாக இருப்பார். கடைசியில் எடப்பாடியின் கூட்டணி ஆட்களா இவிக.


ponssasi
ஜன 31, 2024 12:55

கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வந்த தீர்ப்புதான் இது, கொண்டாட ஏதுமில்லை, இவர்களை தூக்கில் போட இன்னும் பல்லாயிரம் படிகளை கடக்கவேண்டும் இது இந்திய தேசத்தின் சாபம். இவர்களின் அப்பீல் தொண்ணூறு நாட்களுக்குள் முடித்து தீர்ப்பு சொல்லவேண்டும்


அப்புசாமி
ஜன 31, 2024 12:32

சீக்கிரமா தூக்குங்க. இல்லேன்னா ஜனாதிபதி கருணைமனு புண்ணாக்குன்னு போட்டு வெளில வந்துருவாங்க.


ram
ஜன 31, 2024 11:49

என்ன நம்முடைய சட்டத்தை நினைத்தால், இந்த கொலைகாரர்கள் எளிதாக வெளியே வந்து விடுவார்கள். ராஜிவ் காந்தி கொலையாளிகள் போல.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ