உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா ஆர்.ஜி. கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் இடமாற்றம்

கோல்கட்டா ஆர்.ஜி. கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் இடமாற்றம்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால் இன்று இடமாற்றம் செய்யப்பட்டார்.மேற்குவங்கத்தில் கோல்கட்டாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பெண் பயிற்சி டாக்டர் அங்குள்ள கருத்தரங்கு அறையில் கடந்த 8-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சஞ்சய்ராய் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.இந்த விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் துணை முதல்வர் மொஹோ பாத்யா என்பவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். முன்னதாக மருத்துவமனை டீன் சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் புகார்கள் அம்பலத்திற்கு வந்தன. அவரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இவரும் இடமா்றறம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுஜன்பாய்
ஆக 22, 2024 07:57

குற்றவாளியை தண்டிக்கிறதை விட்டுட்டு எல்லா புண்ணாக்கு வேலையும் செய்வாங்க. இந்தியா எப்புடி உருப்படும்?


N.Purushothaman
ஆக 22, 2024 07:19

முன்னாள் டீன் இறந்தவர்களின் உடலை விற்றதாக ஒரு குற்றச்சாற்று தற்போது எழுந்துள்ளது ....மொத்தத்தில் பாரதத்தில் நீதி நேர்மை தர்மம் , நியாயம் ஒழுக்கம் எல்லாம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு அதனால் ஏற்படும் விபரீதம் இப்போது தெரிகிறது ...


Kasimani Baskaran
ஆக 22, 2024 05:34

உண்மையான குற்றவாளி சிக்கி விடக்கூடாது என்பதில் திதி கவனமாக இருக்கிறார். கேடிகளை வைத்து ஆதாரங்களை அளித்ததெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம். அதற்காகவே மம்தாவின் அரசை டிஸ்மிஸ் செய்யலாம்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி