உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை: மம்தா அதிர்ச்சி

கோல்கட்டாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை: மம்தா அதிர்ச்சி

கோல்கட்டா: கோல்கட்டா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு படித்த 31 வயதான அந்த மாணவி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, படித்து முடித்துவிட்டு இரவு உணவை சாப்பிட தாமதமாக சென்றார். அதன் பிறகு மறுநாள் காலையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.அவரது பிறப்புறப்பு, முகம்,உதடு,கழுத்து, வயிறு மற்றும் கைகளில் காயம் இருந்தது. இதனால், அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. அந்த மாணவியின் உடலை 3 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபருக்கும், மருத்துவ கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், ஆனால் அவர் உள்ளே எளிதாக சென்று வர அனுமதிக்கப்பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

முதல்வர் அதிர்ச்சி

இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, இழிவானது. கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. டாக்டரின் குடும்பத்தினருடன் பேசி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கண்டனம்

மாநில எதிர்க்கட்சி தலைவரான பாஜ.,வின் சுவேந்து அதிகாரி கூறுகையில், இச்சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
ஆக 10, 2024 21:49

மம்தா அம்மையார் வாயை திறக்கமாட்டார்களே


தமிழ்வேள்
ஆக 10, 2024 21:45

ரோஹிங்கியா பங்களாதேஷி சகவாசத்தின் பலன் இதுதான்..... இனிமேல் குத்துதே குடையுதே என்று ஒப்பாரி வைக்காமல் இஸ்ரேல் ஸ்டைலில் அதிரடி காட்டினால் தான் இந்த தேசம் பிழைக்கும்..


Ramesh Sargam
ஆக 10, 2024 20:39

இதேபோன்ற ஒரு நிகழ்ச்சி பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் மமதா பொங்கி எழுந்து பெரிய ரகளையில் ஈடுபட்டிருப்பார். துணைக்கு ராகுல், ஸ்டாலின் போன்றவர்களையும் சேர்த்துக்கொண்டிருப்பார்.


பேசும் தமிழன்
ஆக 10, 2024 19:25

பப்பு..... பப்பி..... கனி அக்கா மற்றும் மணி அக்கா..... எங்கே இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.... உங்களை மேற்கு வங்கம் மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்


S. Narayanan
ஆக 10, 2024 18:50

மேற்கு வங்க அரசை மம்தாவால் காப்பாற்ற முடியாது


Ramesh Sargam
ஆக 10, 2024 20:38

அந்த கடவுளால் கூட காப்பாற்றமுடியாது.


Kumar Kumzi
ஆக 10, 2024 17:02

இதிலென்ன சந்தேகம் காட்டேரிகளை ஒட்டு பிச்சைக்காக செல்லமா வளர்த்து விட்டுட்டு இப்போ அனுபவி


Vijay D Ratnam
ஆக 10, 2024 16:44

பெண் டாக்டரை கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கும், மருத்துவ கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். ஆனால் அந்தாளு ராத்திரி நேரத்தில் கூட மருத்துவக்கல்லூரி உள்ளே எளிதாக சென்று வர அனுமதிக்கப்பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளதாம். டே டே டே ஒங்க தில்லாலங்கடி வேலை எப்படின்னு எங்களுக்கு தெரியும்டா. எவனையோ காப்பாற்ற அவசர அவசரமாக எவனையோபிடித்து பலிகொடுக்க போறாய்ங்க. நாளைக்கு அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று சொன்னாலும் சொல்வாயங்கோ.


Nandakumar Naidu.
ஆக 10, 2024 16:24

மம்தா பானர்ஜி அரசில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒவ்வொரு தேர்தல நடக்கும் போதும் TMC தோர்க்கும் தொகுதிகளில் ஹிந்துக்கள் மீது படு கொலைகள்,கற்பழிப்பு என்று வன்முறை தொடர்கிறது. எப்போதோ இந்த அரசை டிஸ்மிஸ் செய்து இருக்க வேண்டும். மத்திய அரசு மௌனமாக இருப்பது கோபத்தை உண்டாக்குகிறது. மத்திய அரசின் பொறுமைக்கும் ஒரு எல்லை வேண்டும். நாடெங்கிலும் உள்ள ஹிந்துக்களை காப்பாற்றுவது மத்திய அரசின் கடமை. ஹிந்துக்களுக்கு என்று இருப்பது ஒரு நாடு தான்.


angbu ganesh
ஆக 10, 2024 17:15

அந்த டாக்டர் பேர் போடல ஒரு வேல ஹிந்து வா இருந்தா என்ன பண்றதுன்னு மறச்சுட்டுலுங்க ஆமா இங்க மட்டும் சட்டம் ஒழுங்கு கிழியுதா


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை