மேலும் செய்திகள்
புதிய நடைமுறை அல்ல!
1 hour(s) ago
லட்சுமணபுரி: பெங்களூரு காந்தி நகர் லட்சுமணபுரியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில். இக்கோவிலின் விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் 12ம் ஆண்டு கும்பாபிஷேக விழா, நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.நாளை மாலை 6:00 மணிக்கு மேல், கோ பூஜை, கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், மகா சங்கல்பம், கலச பூஜை, விமான கோபுர கலச ஸ்தாபனம். மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ சாந்தி ஹோமம், மிருதுஞ்செயா ஹோமம், துர்கா ஹோமம், சுதர்சன ஹோமம், வாஸ்து ஹோமம், தேவி கருமாரியம்மன் மூல மந்திர ஹோமம் நடக்கிறது.நாளை மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜை, விமான கலச அபிஷேகம், ஸ்ரீதேவி கருமாரியம்மன் மஹா அபிஷேகம், கலச அபிஷேகம்; 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி; 8:30 மணிக்கு மஹா அபிஷேகம்; 10:00 மணிக்கு மஹா மங்களாரத்தி; 10:30 மணிக்கு பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.
1 hour(s) ago