உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை பாக்கியம் அருளும் லட்சுமி வெங்கட ரமணர்

குழந்தை பாக்கியம் அருளும் லட்சுமி வெங்கட ரமணர்

மைசூரு அரண்மனை நகர் மட்டுமின்றி, கோவில்களின் நகராகவும் பிரசித்தி பெற்றுள்ளது. புராதன மற்றும் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்கள் இங்குள்ளன. இவற்றில் பழமையான லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலும் ஒன்று. இதன் உயரமான ராஜகோபுரம், பக்தர்களை கவர்ந்திழுக்கிறது.மைசூரில் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்ட, ஏராளமான கோவில்கள் உள்ளன. ஒன்டிகொப்பலு நகர்ப்பகுதியில் பிரசித்தி பெற்ற லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடந்த 1937ல் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் கட்டப்பட்டது. இதை பழமையான கோவில் என, கூறலாம். இதன் உயரமான ராஜகோபுரம், தொலைவில் இருந்து பக்தர்களை கை வீசி அழைக்கிறது.மூலஸ்தானத்தில் வெங்கடரமண சுவாமி, பத்மாவதி அம்மன் விக்ரகங்கள் உள்ளன. பால கோபாலன், உக்ர நரசிம்மர், நவக்கிரக சன்னிதிகளையும் காணலாம். மைசூரு மாவட்ட பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். வெளி மாநில, நாடுகளின் சுற்றுலா பயணியர், மைசூருக்கு வந்தால் லட்சுமி வெங்கடரமண சுவாமியை, தரிசனம் செய்கின்றனர்.திருமணம் தடைபடும் இளம் பெண்கள், இளைஞர்கள், வெங்கட ரமண சுவாமி கோவிலுக்கு வந்து, தங்களுக்கு திருமணம் நடந்தால் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொண்டு, கையில் கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். அதே போன்று திருமணமாகி, குழந்தை இல்லாத தம்பதி, இந்த கோவிலுக்கு வந்து பூஜை செய்தால், வெங்கட ரமணசுவாமி குழந்தை வரம் அளிப்பார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.மகன் அல்லது மகளுக்கு திருமணம் கூடி வந்தால், வெங்கட ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடத்தி, நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.கோவிலில் தினமும் காலை 6:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை பூஜைகள் நடக்கின்றன. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று, பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கும். கோவிலை பார்த்தால், திருப்பதி திருமலையை பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி