உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை 3 வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம்: பிரதமர்

இந்தியாவை 3 வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம்: பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தேர்தலில் பா.ஜ.,,வெற்றி பெற்றால் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம் என டில்லியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். டில்லியில் உள்ள ஏழு தொகுதிக்கும் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஏழு தொகுதிகளிலும் பா.ஜ., நேரிடையாக போட்டியிடுகிறது. டில்லியின் வடகிழக்கு தொகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:உங்களுடைய அன்பு , ஆசிர்வாதம் அனைத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் என் குழந்தைகள். இந்த தேர்தல் இந்தியாவை உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றும். இந்த தேர்தலும் நாட்டின் பொருளாதாரத்தை தனது கொள்கைகளால் திவாலாக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து பாதுகாக்கும். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் செல்வத்தைப் பறிக்க நினைப்பவர்களிடமிருந்து பாதுகாக்கவும்.டில்லியை பிரகாசமாக ஒளிரச்செய்ய பா.ஜ.,வை 7 தொகுதிகளிலும் வெற்றியடையச்செய்யுங்கள் என பேசினார்.தொடர்ந்து சிஏஏ-ன் கீழ் இந்திய குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் அகதிகளை சந்தித்து உரையாடினார் பிரதமர் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அசோகன்
மே 19, 2024 09:15

தமிழ் நாட்டை உலகின் நம்பர் ஒன் பிச்சைக்கார மாநிலமாக மாற்றுவோம்.......... துண்டு சீட்டு சுடாலின் ???


Ramesh Sargam
மே 18, 2024 21:08

மாற்றவிட மாட்டார்கள் தேச துரோக எதிர்க்கட்சியினர் முதலில் அவர்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும்


A1Suresh
மே 18, 2024 20:42

பாகிஸ்தானை பிச்சைக்கார நாடாக்கியது போல கான் கிராஸ் கட்சியை அழித்தொழியுங்கள் தலைவரே வாழ்க பல்லாண்டு


ராஜு
மே 18, 2024 19:47

பண்ணுனதெல்லாம் போதும்.


Priyan Vadanad
மே 18, 2024 19:46

நமது பிரதமர் கொஞ்சம் களைப்புடன் தோன்றுகிறார்/ ஓய்வு அவருக்கு தேவை/ ராகுல் மாதிரி இவரும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொன்னால் அவருக்கே போரடித்து களைத்துபோக மாட்டாரா?/


ஆரூர் ரங்
மே 19, 2024 10:56

வாய்புளித்ததோ மாங்காய் புளித்த உதாரணத்தை எத்தனை முறை கேட்டுக்கிட்டிருந்தும் அலுத்ததா?


Priyan Vadanad
மே 18, 2024 19:42

தானாய் உதிக்கும் சூரியனை நாங்கள்தான் கட்டி மேலே இழுத்துக்கொண்டு போகிறோம் என்று சொன்னாலும் அதையும் நம்ப நாங்கள் இருக்கிறோம் தலைவரே/


Priyan Vadanad
மே 18, 2024 19:39

வித விதமான தொப்பி போட்டு கலர்புல்லா ஏன் டில்லியில் இங்கு ராமர் கோயில், பாகிஸ்தான், தென்னக மக்கள், கோயிலிடிப்பு, என்றெல்லாம் பேசவில்லை/ அவர் வழக்கம் போல உபி போன்ற மாநிலங்களில் பேசுவததை இங்கேயும் பேசினால் ஓட்டுகள் குவியும்


Priyan Vadanad
மே 18, 2024 19:31

"இஸ்ரேல் பாலஸ்தீன சமாதான புறா" தனது ரெக்கைகளில் கப்பல் வெடிமருந்துகளை இஸ்ரேல் நாட்டுக்கு பறக்க விட்டபோது அது ஸ்பெயின் நாட்டில் இறங்கவிடாமல் அந்த நாடு தடுத்து விட்டது/ படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று சொல்லுவார்கள்/


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி