உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தாவின் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்; மே.வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி சபதம்

மம்தாவின் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்; மே.வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி சபதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம். ஊழல் மிகுந்த திரிணமுல் காங்., அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவோம். இந்த மக்கள் விரோத அரசால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

பொதுக்கூட்டம்

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்தாண்டு ஏப்ரலில் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தற்போதே சூடுபிடித்து உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் என்ற இடத்தில், பா.ஜ., பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.இதில் பங்கேற்க கொல்கட்டாவுக்கு விமானத்தில் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஹெர்பூருக்கு புறப் பட்டார். கடும் பனிமூட்டத்தால் அங்கு தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து கொல்கட்டாவுக்கே பிரதமர் மோடி மீண்டும் திரும்பினார். அங்கிருந்தபடி, தொலைபேசி மூலம் தஹெ ர்பூரில் திரண்டிருந் த மக்களிடையே அவர் உரையாற்றினார்.பிரதமர் மோடி பேசியதாவது: ஆளு ம் திரிணமுல் காங்., என்னையும், பா.ஜ., வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும். அது பற்றி கவ லை இல்லை. ஆனால், மக்களை பிணையாக வைத்து, அவர்களை துன்புறுத்தி, மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்தை அக்கட்சி தடுக்கக்கூடாது. ஊழல், வாரிசு அரசியல், ஓட்டு வங்கி அரசியல் ஆகியவை மாநிலத்தை ஆக்கிரமித்து உள்ளன. முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்த காட்டாட்சிக்கு விரைவில் நாங்கள் முடிவு கட்டுவோம். மேற்கு வங்க அரசுக்கு தேவையான நிதியுதவியை அளித்து வருகிறோம். எந்த குறையும் வைக்கவில்லை. ஆனாலும், மாநிலத்தின் அனைத்து துறைகளிலும், 'கமிஷன் கலாசாரம்' தலைவிரித்தாடுகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். இது வெறும் வாக்குறுதி அல்ல; எங்களது நீண்டகால கனவு. அதை நிறைவேற்ற வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.ஊழல் இல்லாத துாய்மையான ஆட்சியை தருவோம். அதற்கு, பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களே சாட்சி. பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது, அடுத்தாண்டு மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கும். கங்கை நதி பீஹாரில் இருந்து மேற்கு வங்கத்தில் பாய்வது போல, பீஹார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கும்.

எதிரொலிக்கும்

மேற்கு வங்கத்தில், ஊடுருவல்காரர் களுக்கு ஆளும் திரிணமுல் காங்., ஆதரவு அளிக்கிறது. அதனால் தான், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை அக்கட்சி எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம். இதில் சமரசத்துக்கே இடமில்லை. மேற்கு வங்கத்தின் வீதிகளில் இப்போது ஒரு முழக்கம் பலமாக ஒலிக்கிறது. அது, 'வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும்' என்ற முழக்கம் தான். திரிணமுல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இது, தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.3,200 கோடி நெடுஞ்சாலை; திட்டங்கள் துவக்கி வைப்பு

நாடியா மாவட்டத்தின் தஹெர்பூரில், 3,200 கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்க இருந்தார். ஆனால் கடும் பனிமூட்டத்தால் அவரால் வர முடியவில்லை. இதனால், மேற்கு வங்க கவர்னர் அனந்த போஸ், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை துவக்கி வைத்தார். இதில், நாடியா மாவட்டத்தில், 66.7 கி.மீ., நீளமுள்ள பரஜாகுலி -கிருஷ்ணாநகர் இடையிலான நான்குவழிச் சாலை, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பரசாத் - பரஜாகுலி இடையிலான நான்குவழிச் சாலை திட்டங்கள் அடங்கும். இத்திட்டங்கள், கொல்கட்டா - சிலிகுரி இடையே முக்கிய இணைப்பாகவும் , பயணத்தை 2 மணி நேரம் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை எழில் விமான நிலையமுனையம்:அசாமில் திறப்பு

வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது . இங்கு, தலைநகர் குவஹாத் தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். 4,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனைய ம், இய ற்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் செடிகள், தாவரங்கள் என பசுமையாக உள்ளது. வடகிழக்கு பிராந்தியத்தின் இயற்கை நிலப்பரப்பை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இது, அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, “இது அசாமின் வளர்ச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஜெய்ஹிந்த்புரம்
டிச 21, 2025 22:13

மம்தா தீதி 15 ஆண்டுகள் முதல்வராக இருந்து நாலாவது இன்னிங்க்ஸ் போனால் பெரிய சாதனை. மெடல் அவருக்கு போகும்.


Rathna
டிச 21, 2025 16:04

எல்லையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பங்களாதேஷி, ரோஹினியாக்களை உள்ள விடுவதில், மம்தாவிற்கு இரக்கம் காட்டுவது உங்கள் அமைச்சரவைக்கு மிக பெரிய அவமானம்.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 21, 2025 12:18

தமிழ்நாட்டு காட்டாட்சிக்கு ஆதரவு மேற்கு வங்க காட்டாட்சிக்கு எதிர்ப்பா? இது என்ன இரட்டை நிலைப்பாடு?


Barakat Ali
டிச 21, 2025 14:32

பாஜகவுக்கு உங்களுடைய திராவிட மாடல் பிடித்திருக்கிறதாம் ......


Iyer
டிச 21, 2025 10:41

மேற்கு வங்கத்தில் SIR சரியாக நடக்கவில்லை. மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் WB + TN மாநிலங்களில் SIR நடக்க வேண்டும் அப்போதுதான் 2 மாநிலங்களில் ஊழல் ஆட்சிகள் முடிவடையும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2025 12:05

ஆம் ....


Indian
டிச 21, 2025 09:25

எது காட்டாட்சி என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் .


Thravisham
டிச 21, 2025 11:33

எந்த மக்கள் முடிவு செய்யணும்?


பாலாஜி
டிச 21, 2025 08:36

மத்திய அரசில் நரேந்திரமோடியின் "நானே ராஜா" "நானே மந்திரி" என்ற ஹிட்லர் ஆட்சியை நிரந்தரமாக அழிக்கவேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2025 10:23

ஆனால் மீண்டும் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை எம்பிக்களால் அவரே பிரதமர் ஆகிறாரே அவர் பிரதமர் வேட்பாளர் என்று தெரிந்ததுதானே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்


Thravisham
டிச 21, 2025 11:38

ஆட்சி வேணுமா?


Mario
டிச 21, 2025 08:29

 பிஜேபியின் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்


..
டிச 21, 2025 07:40

தமிழ்நாட்டையும் கொஞ்சம் கண் வைங்கதமிழ்நாட்டுக்கு முடிவு கட்டுங்க


ஜெய்ஹிந்த்புரம்
டிச 21, 2025 05:54

தஹெர்பூருக்கு புறப் பட்டார். கடும் பனிமூட்டத்தால் அங்கு தரையிறங்க முடியவில்லை.


Mani . V
டிச 21, 2025 05:40

அப்பு, முதலில் தமிழ்நாட்டில் நடக்கும் காட்டாட்சிக்கு ஒரு முடிவு கட்டுங்க.


Thravisham
டிச 21, 2025 11:40

தமிழகத்தில் நடப்பது ஊரை அடித்து உலையில் ஊழல்மிகு பேயாட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை