உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு கார்கே "அட்வைஸ்"

இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு கார்கே "அட்வைஸ்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்தால் மட்டுமே மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும் என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்கே பேசியதாவது: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்ய, அடுத்த 3 மாதத்தை தலைவர்கள் கட்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும். முக்கியத்துவம் அல்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பதுடன், உட்கட்சி பிரச்னைகளை மீடியாக்களிடம் பேசாதீர்கள். இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தால் தான் தேர்தலுக்கு பிறகு புதிய அரசை அமைக்க முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி பெயரளவில் உள்ளன. ஆனால், ‛ இண்டியா' கூட்டணியானது, அடிமட்ட அளவில் தொண்டர்களுடன் தொடர்பில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் தோல்வியை மறைக்க காங்கிரஸ் கட்சியானது, உணர்ச்சிகரமான பிரச்னைகளை தூண்டி வருகிறது. வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் நிலைமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ராகுலின் பாத யாத்திரை எடுத்துக்காட்டும். இவ்வாறு கார்கே பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Barakat Ali
ஜன 05, 2024 07:53

ஒய் எஸ் ஷர்மிளா உள்ளே வந்த பிறகுதான் இரவு பகலாக உழைக்க வேண்டும் என்று பேசுகிறார்கள் .....


Ramesh Sargam
ஜன 05, 2024 00:24

இரவு பகல் பார்க்காமல் உழைக்கவேண்டாம். ஊழல் புரியாமல் ஆட்சி அமைப்போம் என்று சத்தியம் செய்துகொடுங்கள். ஏதோ தேர்தலில் ஜெயிப்பதற்கு கொஞ்சம் வாய்ப்பு உண்டு. முதலில் உங்களுக்கு இடையே இருக்கும் மனஸ்தாபத்தை போக்குங்கள்.


பேசும் தமிழன்
ஜன 05, 2024 00:17

அப்படியானால் பப்பு வாய்க்கு பிளாஸ்திரி தான் போட வேண்டும்... அவர் பேச பேச தான்.... பிஜெபி கட்சிக்கு மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து விடுகிறார்கள் .... உண்மையில் பப்பு கான் கிராஸ் கட்சிக்காக பிரசாரம் செய்கிறாரா இல்லை பிஜெபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்கிறாரா ??.


M Ramachandran
ஜன 05, 2024 00:11

தொண்டர்கள் ??? உழைக்க வேண்டும் இவர் ஜாலியா வெளிநாட்டில் சென்று சுத்துவார்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 04, 2024 20:44

பாபுவின் மைண்ட் வாய்ஸ்: தாத்தா கொஞ்சம் தள்ளி ஒக்காருங்க.


தாமரை மலர்கிறது
ஜன 04, 2024 20:39

தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். ஆனால் ராகுல் தாய்லாந்து சுற்றுலா செல்வார். ஜெயித்தபிறகு கஷ்டப்பட்டு உழைத்த தலைவர் சச்சின் பைலட், சிவகுமார், மாதவ் சிந்தியா போன்றோரை சோனியா ஒதுக்கிவிட்டு, கார்த்திக் சிதம்பரம் போன்ற ஒரு பொம்மைக்கு முதல்வர் பதவி கொடுப்பார். உழைப்பவர் ஒருவர், ஊதியம் பெறுவபர் இன்னொருவர் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் இலக்கணம்.


SIVAN
ஜன 04, 2024 19:05

தமிழ்நாடு மாதிரி, congress ஆட்சிக்கு வந்தால்,மீண்டும் இந்தியா 1980 க்கு போயிடும்.காங்கிரஸ் பசங்கள வாக்காளர்கள் துடைத்து எறிவார்கள். இது நிச்சயம்.


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 19:05

போட்டோவில் பப்புஜீ மைண்ட் வாய்ஸ் = இந்த கிழட்டு பய நம்மள எங்கே சகதியில் தள்ளி விட பாக்குதோ. நம்ப முடியல்லே.= நக்கல் தொனி மூஞ்சி தெளிவாக சொல்றது.


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 18:59

நாம இருவரும் இரவு பகலாக கடுமையாக உழைத்து பி ஜே பி யின் அபார வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று சொல்ல வர்றீங்கன்னு புரியுது.


விடியல்
ஜன 04, 2024 18:47

இரவு பகல் பாராமல் உழைத்து இந்திரா குடும்பத்தை அரியணையில் அமர்த்திவிட்டு நீங்கள் சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ