உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குலாம் நபி ஆசாத்தை எதிர்த்து களமிறங்குகிறார் முப்தி

குலாம் நபி ஆசாத்தை எதிர்த்து களமிறங்குகிறார் முப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: லோக்சபா தேர்தலில் ஆனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தான் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் போட்டியிடுகிறார். தேசிய அளவில் ‛ இண்டியா ' கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை காஷ்மீரில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்.,ம் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற குலாம் நபி ஆசாத் ‛ஜனநாயக வளர்ச்சி ஆசாத்' என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவரும் அங்கு களமிறங்கி உள்ளார். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 5 லோக்சபா தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில், ஆனந்த்நாக்- ரஜோரி தொகுதியில் போட்டியிட போவதாக மெகபூபா முப்தி அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் அவருக்கு பரவலாக செல்வாக்கு உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்து உள்ளனர். இந்த தொகுதியில் தான், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் களமிறங்கி உள்ளார். தேசிய மாநாட்டு கட்சி சார்பில், மியான் அல்தாப் போட்டியிடுகிறார்.இத்தொகுதியில் கடந்த முறை தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bye Pass
ஏப் 07, 2024 21:21

ராணுவம் தான் வெற்றியை தீர்மானிக்கும்


Godfather_Senior
ஏப் 07, 2024 19:40

அம்மா சேர்த்திருக்குற சொத்துக்கு மக்கள் நிச்சயமாக டெபாசிட் இழக்கவைப்பார்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எல்லா மவுசும் ஆர்ட்டிகள் முன்னூத்தி எழுபத்தோட போச்சி இனிமேல் மக்களை ஏமாத்த முடியாதபடி மோடி ஆப்படிச்சிட்டார் என்பதே உண்மை நிலவரம் ரோஹிணி சட்டத்தை வச்சி எவ்வளவு கொள்ளை அடிச்சீங்க மெஹபூபா ?


மேலும் செய்திகள்



புதிய வீடியோ