உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛சாகச ரீல்ஸ் வீடியோ போட்ட காதல் ஜோடிக்கு போலீஸ் போட்டது காப்பு

‛சாகச ரீல்ஸ் வீடியோ போட்ட காதல் ஜோடிக்கு போலீஸ் போட்டது காப்பு

புனே: மஹாராஷ்டிராவில் கோயில் ஒன்றின் வளாகத்தில் பழைய கட்டட மேற்கூரையில் சாகச ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். வீடியோ எடுத்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் மஹிர்காந்தி, 27 இவரது தோழி மீனாட்சி சலோன்கே 23, இருவரும் புனே நகரில் சுவாமி நாராயண் என்ற கோயில் வளாகத்தில் பழமையான கைவிடப்பட்ட கட்டடத்தின் உச்சிப்பகுதிக்கு சென்றனர். அங்கு காதலன் தன் காதலியின் ஒரு கையை பிடித்து அந்தரத்தில் தொங்கவிட்டவாறு சாகச ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பதிவேற்றினர். இது இணையதளத்தில் வைரலானது.பார்தி வித்யாபீட போலீஸ் நிலைய போலீசார் காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ரீல்ஸ் வீடியோ எடுத்த நபர் தலைமறைவானதால், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Iniyan
ஜூன் 22, 2024 02:25

இந்த நாய்கள் செத்து தொலைந்தால் நாட்டுக்கு நல்லது


LAX
ஜூன் 22, 2024 00:30

செய்தியில் முழுமை தன்மை இல்லை.. உரைகல் செய்தியின் வார்த்தை/சொற்கள் கோர்வைகளின் தரம் வெகுவாகக் குறைந்து விட்டது..


தாமரை மலர்கிறது
ஜூன் 21, 2024 23:16

சிறுவர்கள் ஆர்வக்கோளாறில் தவறு செய்துவிட்டார்கள். மன்னித்துவிடுவதில் தவறில்லை.


Padmasridharan
ஜூன் 22, 2024 08:20

மன்னிப்பதற்கும்..ஒரு சின்ன தண்டனை இவர்களுக்கும், இவர்களின் பெற்றோர்களுக்கும் தரப்பட வேண்டும் ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை