உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., அரசியலில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்; முதல்வர் பதவிக்கு அனைத்து கட்சிகளும் முயற்சி

மஹா., அரசியலில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்; முதல்வர் பதவிக்கு அனைத்து கட்சிகளும் முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடக்கும் தேர்தலில், எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதில் ஒரு தெளிவு ஏற்படவில்லை. இந்நிலையில், இரண்டு கூட்டணிகளில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்றன. இதனால், தேர்தலுக்குப் பின், மஹாராஷ்டிரா அரசியலில் மிகப்பெரிய சடுகுடு ஆட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.மஹாராஷ்டிராவில் தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்., ஆகியவை அடங்கிய, மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதே நேரத்தில், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவு ஆகியவை, மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

வாய்ப்பு

மாநில சட்டசபையின், 288 தொகுதிகளுக்கும், 20ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வரும் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அனைத்து கருத்து கணிப்புகளும், எந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிவிக்கவில்லை. இதனால், குழப்பமான சூழ்நிலையே உள்ளது.இந்த நிலையில், இரண்டு கூட்டணியில் உள்ள ஆறு கட்சிகளும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்றன. இதனால், கூட்டணிகளுக்கு இடையேயும், உள்ளேயும் கடுமையான போட்டி நிலவுகிறது.கடந்த 2019 தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட கூட்டணி மாற்ற காட்சிகள், தற்போது ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்த தேர்தலில், பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் இந்தக் கூட்டணியே வென்றது. ஆனாலும், முதல்வர் பதவி கேட்டு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போர்க்கொடி துாக்கினார். அதிக இடங்களில் வென்ற பா.ஜ., இதற்கு மசியவில்லை.இதனால், ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, காங்கிரசுடன் இணைந்து, உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் அறிவித்தார்.இதுவே, மஹா விகாஸ் அகாடி கூட்டணி உருவாவதற்கு காரணமானது. அந்தக் கூட்டணி ஆட்சியையும் பிடித்தது.கடந்த, 2022ல் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரசிலும் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., ஆகியவற்றுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரமும் அளித்தது. பா.ஜ., மற்றும் இந்த இரண்டு கட்சிகள் தங்களுடைய கூட்டணிக்கு 'மஹாயுதி' என்று பெயிரிட்டன.தற்போது இரண்டு கூட்டணிகளிலும் பிளவுபட்ட கட்சிகள் உள்ளன. வரும் தேர்தலுக்குப் பின், இந்த பிளவுபட்ட கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிவு

அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதால், சரத் பவார் - அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே மீண்டும் இணைவதற்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல, இரு கூட்டணியில் உள்ள கட்சிகள், மாற்று கூட்டணிக்கு மாறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், இரண்டு கூட்டணியில் உள்ள, ஆறு கட்சிகளும் முதல்வர் பதவிக்கு குறிவைத்துள்ளன. தேர்தலுக்குப் பின், அதிக தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்கும் என, இரண்டு கூட்டணியிலும் பேசப்படுகிறது.

இந்த தேர்தலிலும் திருப்பம்?

கடந்த 30 ஆண்டுகளில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் முதல்வர்கள் தேர்வில் எதிர்பாராத திருப்பங்கள், ஆச்சரியங்கள் நிரம்பியதாகவே இருந்தது. 1995ல் மனோகர் ஜோஷி, 1999 மற்றும் 2004ல் விலாஸ்ராவ் தேஷ்முக், 2019ல் உத்தவ் தாக்கரே என, யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர்களாகினர். அதுபோன்ற ஒரு அதிர்ச்சி, ஆச்சரியம் இந்த தேர்தலுக்குப் பின் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

SP
நவ 17, 2024 15:00

அஜித்பவாரை தேர்தலுக்கு முன்பே கூட்டணியிலிருந்து நீக்கியிருக்கவேண்டும்.


Duruvesan
நவ 17, 2024 09:39

எது எப்படியோ பிஜேபிக்கு முடிவுரை எழுத படும். அஜித் மீண்டும் சரத்துடன். உதவ் ஏக்நாத் இணைப்பு. சீங்கிரஸ் முதல்வர். பிஜேபிக்கு 30-50 சீட் கிடைக்கும்


Murugesan
நவ 17, 2024 11:02

திமுக போடுகின்ற .....


nagendhiran
நவ 17, 2024 13:06

பாஜக 30 40 வெற்றி பெரும் என்பது உங்களோட ஆசை? அனால் மகாராஸ்டராவில் மக்கள் ஆசை வேற பொருத்திருந்து கூவுங்க?


vadivelu
நவ 17, 2024 13:56

அவ்வளவு நம்பிக்கை உடன் இருக்கும் நீங்க பி ஜெ பி 51 சீட்டு பெற்று விட்டால் நீங்க இனி கருத்து எழுத மாட்டேன் என்று துணிந்து சொல்லுவீங்களா. இன்னும் கேளுங்க, மஹாராஷ்டிராவில் பி ஜெ பி மட்டுமே எல்லா கட்சிகளையும் விட ஒரு சீட்டு அதிகம் வாங்கி விட்டாலும் இனி அரசியல் பேச மாட்டேன் என்று சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கா , இல்லை உருட்டி கொண்டேதான் யிருப்பீர்களா.


AMLA ASOKAN
நவ 17, 2024 09:31

இரண்டு கூட்டணியில் உள்ள ஆறு கட்சிகளில் 5 கட்சிகள் எவ்வளவு MLA களை பெற்றாலும், BJP ஒற்றை இலக்கை பெற்றாலும், பிஜேபி தான் ஆட்சி அமைக்கும். பிஜேபி நபர் தான் முதல்வராக வருவார். அணைத்து ஊழல் MLA க்களும் CBI , IT , ED க்கு கீழ் பணியத்தான் வேண்டும் .


T.sthivinayagam
நவ 17, 2024 08:50

கட்சி இரண்டுபட்டால் பாஜகாவுக்கு கொண்டாட்டம்


Barakat Ali
நவ 17, 2024 09:40

ஆடீம்கா உடைந்தபொழுது டீம்கா வருந்தியதா ?


VENKATASUBRAMANIAN
நவ 17, 2024 08:08

பாஜக ஒழித்து கட்டுவதிற்கு ஏன் இடம் கடற்படை எடுக்கிறார்கள். எல்லோருக்குமே பணம் பதவி ஒன்றே குறி. இதில் என்ன நியாயம் அநியாயம். அரசியல் தொழில் ஆகிவிட்டது.


Kasimani Baskaran
நவ 17, 2024 06:47

நீண்டகால அடிப்படையில் தேவையற்ற கட்சிகளை ஒவ்வொன்றாக ஒழித்துக்கட்டுவது பாஜகவின் வியூகம். இதுவரை அது சிறப்பாகவே வேலை செய்திருக்கிறது. இந்தத்தேர்தலிலும் அது சிறப்பாக செய்யும் என்று நம்பப்படுகிறது.


Ramanujam Veraswamy
நவ 17, 2024 05:40

Modern politics - No party can claim CM post, even with absolute majority in Assembly election. Most powerful party despite its strength in the house will definitely acquire majority and claim CM post - thanks to money power.In that case, it is obvious who will be the ultimate CM.


vadivelu
நவ 17, 2024 07:14

Obvious? will congress be able to snatch the CM seat? BJP has d that even if they become the single largest party, will make Eknath as Cm. Is Eknath the richest of all? Can Even with 20 MLAs Ajith Pawar become CM as he is the richest? what is OBVIOUS?


சமீபத்திய செய்தி