உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடுக்கத்துார் மடத்தில் நாளை தைப்பூசம் பிப்., 1ல் மகான் குரு பூஜை விழா

ஒடுக்கத்துார் மடத்தில் நாளை தைப்பூசம் பிப்., 1ல் மகான் குரு பூஜை விழா

பெங்களூரு : ஒடுக்கத்துார் மடத்தில் வரும் 25ம் தேதி, தமிழர்களின் திருவிழாவான தைப் பூசம் கொண்டாடப்படுகிறது.பெங்களூரில் வசிக்கும் முருக பக்தர்கள் ஏராளமானோர், தைப்பூச திருநாளில் பங்கேற்க பழநி சென்றுள்ளனர். பலர் விரதம் அனுஷ்டித்து வருகின்றனர்.பெங்களூரு ஹலசூரு கங்காதர ஷெட்டி ரோட்டில், ஸ்ரீமகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப் பூசம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 25ம் தேதி 74வது ஆண்டு, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7:00 மணிக்கு பால தண்டாயுதபாணி சுவாமிக்கு மஹா அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் அகவல் பாராயணம்; காலை 11:00 மணிக்கு ஸ்ரீராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனம்; மதியம் 12:00 மணிக்கு அன்னதானம்; மாலை 6:30 மணிக்கு ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி, ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.அன்று மாலை 6:30 மணிக்கு சண்முக வடிவேலின் 'சும்மாயிரு சொல் ஆரா' என்ற தலைப்பிலும், 26ம் தேதி மாலை 6:30 மணிக்கு, விஜயகுமாரின் 'வேலுண்டு வினை இல்லை' என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நடக்கிறது.ஸ்ரீ ஒடுக்கத்துார் சுவாமிகளின் 109வது ஆண்டு, மகான் குரு பூஜை இரண்டு நாட்கள் நடக்கிறது. பிப்ரவரி 1ம் தேதி மாலை 5:30 மணிக்கு ருத்ர ஹோமம்; 2ம் தேதி காலை 6:00 மணிக்கு மஹாபிஷேகம்; காலை 7:30 மணிக்கு ருத்ர ஹோமம், ருத்ர பாராயணம்; காலை 9:00 மணிக்கு பூர்ணாஹுதி; மதியம் 12:00 மணிக்கு மஹா மங்களராத்தி நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி