உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா. அரசியலில் திடீர் திருப்பம்: காங். முக்கிய தலைவர் பா.ஜ.வில் சேர முடிவு

மஹா. அரசியலில் திடீர் திருப்பம்: காங். முக்கிய தலைவர் பா.ஜ.வில் சேர முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சங்ராம் தோப்டே விரைவில் பா.ஜ.,வில் இணைகிறார்.சங்ராம் தோப்டே புனே மாவட்டம் போர் தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பாரம்பரிய காங்.குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை அனந்த்ராவ் தோப்டே 6 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர். 2024 சட்டசபை தேர்தலில் தேசியவாத காங். வேட்பாளர் சங்கர் மண்டேகரிடம் தோல்வியை தழுவினார். கட்சிக்குள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி வந்த சங்ராம் தோப்டே, சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தமது சமூக வலைதள பக்கத்தில் இருந்த காங்கிரஸ் சின்னத்தையும் நீக்கினார்.இந் நிலையில் அவர் விரைவில் பா.ஜ.,வில் தம்மை இணைத்துக் கொள்ள இருக்கிறார். இதுகுறித்து சங்ராம் தோப்டே கூறி இருப்பதாவது; காங். தலைமை என்னை புறக்கணித்ததே இதற்கு காரணம். சில ஆண்டுகளாக நான் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டேன். 2019ம் ஆண்டு மகா. விகாஸ் அகாடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் கிடைக்கவில்லை.எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

thehindu
ஏப் 21, 2025 21:49

குறுகிய காலத்தில் நிறைய கொள்ளையடிக்க பாஜதான் சிறந்த இடம்


Raman
ஏப் 21, 2025 22:32

You are DMK looks like


Kumar Kumzi
ஏப் 21, 2025 23:22

ஹிந்து பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா கதறுவதை கேட்க சந்தோசமா இருக்கு


V Venkatachalam
ஏப் 21, 2025 21:11

ஊழல் பெருச்சாளி களிடமிருந்து வெளியே வந்தால் சரி.. உழைத்தால் தான் பதவி என்பதை பாஜக அவருக்கு உணர்த்த வேண்டும். கான் கிராஸ் காரர்களிடம் பா ஜ க, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 21:07

திமுகவுக்கும் மஹா. காங்கிரசின் இந்நிலை வரும் .......


தாமரை மலர்கிறது
ஏப் 21, 2025 21:06

காங்கிரஸ் இல் இருந்தால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக இருந்து தொடர்ந்து தோற்றுகொண்டே இருக்கவேண்டும் என்பதால், பிஜேபி க்கு வருகிறார்.


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 20:19

தண்ணீரிலிருந்து வெளியில் எவ்வளவு காலம் மீன் தாக்கு பிடிக்கும் ..பதவில்லாம காங்கிரஸ் காரன் நிலைமையும் அது தானே ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை