மேலும் செய்திகள்
மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
8 hour(s) ago
தி.மு.க., செயற்குழு கூட்டம்
8 hour(s) ago
பக்தர்களிடம் பணம் வசூல் : திருநள்ளாறில் 2 பேர் கைது
8 hour(s) ago
புதுடில்லி: டில்லியில் ஐஎஸ்ஐ தொடர்புடைய ஆயுத கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யயப்பட்டது. டில்லியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான எஸ்ஐ தொடர்புடைய ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக டில்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, போலீசார் நடத்திய சோதனையில் சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அஜய், மன்தீப், தல்விந்தர் மற்றும் ரோஹன் எனு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த கும்பல் துருக்கி மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட உயர் ரக துப்பாக்கிகளை பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு சப்ளை செய்து வந்தது. பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் பஞ்சாபில் ஆயுதங்கள் விற்பனை செய்து வந்தது டில்லி போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலம் ஆனது. அவர்களிடம் இருந்து 10 விலையுயர்ந்த வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 92 தோட்டாக்களை போலீசார் மீட்டனர். அவர்கள் டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள குற்றவாளிகள் மற்றும் சதி செயலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் இருவர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்இந்த கும்பல் பாகிஸ்தான் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உடன் தொடர்புடைய நபர்களின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வந்துள்ளது. ஆயுதங்கள் முதலில் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்டன. இந்த நபர்கள் இதுவரை இந்தியாவில் எத்தனை ஆயுதங்களை விற்றுள்ளனர். இந்த கும்பலுக்கு பின்ணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago