உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாஜ்மஹாலில் மெய்சிலிர்த்த மாலத்தீவு அதிபர் முய்சு

தாஜ்மஹாலில் மெய்சிலிர்த்த மாலத்தீவு அதிபர் முய்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆக்ரா: அரசு முறைப் பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலை நேற்று சுற்றிப் பார்த்தார்.நம் அண்டை நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக, நம் நாட்டுக்கு வந்துள்ளார். டில்லியில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று முன்தினம் சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடியையும் சந்தித்தார். அப்போது, இந்தியா - மாலத்தீவு இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இந்நிலையில், டில்லியில் இருந்து தனி விமானத்தில் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவுக்கு வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோரை, மாநில அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார். தொடர்ந்து, காரில் தாஜ்மஹாலுக்கு இருவரும் சென்றனர்.மனைவி சஜிதா உடன் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்த அதிபர் முகமது முய்சு, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். 'தாஜ்மஹாலின் அழகை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். இது, காதல் மற்றும் கட்டடக்கலை சிறப்புக்கு ஒரு சான்று' என, பார்வையாளர்கள் புத்தகத்தில், அதிபர் முகமது முய்சு எழுதி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Lion Drsekar
அக் 09, 2024 19:52

வந்தாரை வாழவைக்கும் என்ற முதுமொழிக்கு இதுவே சான்று, தேர்தல் நேரத்தில் இவர் சூளுரைத்து நம் நாட்டுக்கு எதிராக , ஆனால் வெற்றிபெற்ற பின்பு கண்டது , சுருண்டதும், இப்போது அடைக்கலம் , நம் மக்கள் அழைப்பு, அரவணைப்பு, பல லட்சம் கோடி பணமுடிப்பு வந்தே மாதரம்


RAMESH
அக் 09, 2024 12:46

ஆடிய ஆட்டம் என்ன , பேசிய வார்த்தைகள் என்ன, நீங்க எல்லாம் இப்படி பேசிய பொழுதே நடுத்தெருவுக்கு வருவீங்கன்னு எங்களுக்கு தெரியும் . அந்த அல்லாஹ் உன்னை இப்படி யாசகம் கேட்க வச்சிட்டான் பார்த்தயா ..கர்மா விடாது


Barakat Ali
அக் 09, 2024 11:35

டில்லியில் இருந்து தனி விமானத்தில் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவுக்கு ......... நாடு திவால் ஆகுற மாதிரி இருக்கு ........ ஜனாப் மற்றும் பேகம் தனி விமானத்தில் ....


N Srinivasan
அக் 09, 2024 11:29

ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வெளி நாட்டு பிரதிநிதியை தாஜ் மஹால் பார்க்க சென்றுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு வெளிநாட்டு பிரதிநிதியையும் அங்கே அழைத்து செல்லவில்லை. புகழ் பெற்ற கோவில்களுக்கு தான் சென்றுள்ளனர்.


M.COM.N.K.K.
அக் 09, 2024 09:56

ஏதிரியையும் அணைத்து போகிறவர்கள் வெற்றிபெறுவார்கள்


பெரிய குத்தூசி
அக் 09, 2024 09:53

உலகத்தில் உள்ள மனநிலை பாதித்த ஆளுங்க எல்லாம் சமாதியை எப்படி வர்ணிக்கிறாங்கே. முன்பு போல் தாஜ்மஹால் சமாதியை பார்க்க கூட்டம் செல்வது இல்லை. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பர்கர் எப்படி ஸ்டைல் புட் பாப்புலர் ஆனதோ அந்த பர்கர் பிசா மாதிரி வெளிநாடு கரனுகளும், இங்கே உள்ள ஓண்ணும் இல்லாதத ஊத்தி பெருக்கும் திராவிட மாடல் 500, பிரியாணி உபி மாதிரி சமாதியை சுத்திபாக்கறாங்க. இந்தியாவில் ஒவொரு கிலோமீட்டர்ல் உள்ள கோயில்களின் பிரமிப்பான சிற்பங்கள், சிலைகள், குகை ஓவியங்கள் என ஆயிரம் ஆயிரம் மெய்சிலிப்பு இந்தியா முழுவதும் உள்ளது. அட மகாபலிபுரம் குகை ஓவியத்தை பாருங்க,


RAMESH
அக் 09, 2024 12:37

அருமையான பதிவு


Yuvaraj Velumani
அக் 09, 2024 09:14

மாலத்தீவு சுற்றுலா செல்ல கூடாது பாய்க்காட்


Yuvaraj Velumani
அக் 09, 2024 09:13

இந்து விரோதி இவன் அமைச்சர் இந்தியாவை பற்றி பேசியதை மறக்க கூடாது


Palanisamy Sekar
அக் 09, 2024 05:59

சொந்த சாதிசனம் என்றாலே சிலிர்க்கத்தானே செய்யும். இவருக்கெல்லாம் இப்படிப்பட்ட வரவேற்பு கொடுப்பது வீணே. இந்தியாவின் அண்டைநாட்டு எதிரியில் முதலிடத்தில் இந்த ஆள்தான் இருக்கின்றார். தற்காலிக அதிபர் தான். காலங்கள் மாறும் இவர் அந்த மாற்றங்களில் காணாமல் போவதும் காண்போம்.


Kasimani Baskaran
அக் 09, 2024 05:21

கோவிலை கல்லறையாக்கி ஒரு பாரசீக கட்டிடக்கலை என்று பொய் சொல்லி அதை வைத்து சுற்றுலா வருபவர்களை ஏமாற்றி பல காலமாக இப்படி பாராட்டுக்ககளை வாங்கி இருக்கிறார்கள். ஆப்கானிய கொள்ளைக்கூட்டத்திடம் எது கட்டிடக்கலை? காங்கிரஸ் மன்னர்களின் உலக மகா பொய்களில் இதுவும் அடங்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை