உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலுார் வனத்தில் தீ: 150 ஏக்கர் நாசம்

மாலுார் வனத்தில் தீ: 150 ஏக்கர் நாசம்

மாலுார்: மாலுாரின் சிக்கதிருப்பதி அருகே, லக்கூர் கிராமத்தை ஒட்டியுள்ள காடுமுத்சந்திரா என்ற வனப்பகுதியில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.சிக்கதிருப்பதி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது லக்கூர். இங்கு, 300 ஏக்கர் வனப் பகுதி உள்ளது. இங்கு மயில்கள், மான்கள் உட்பட பல வகையான பறவைகளும் உள்ளன.இங்கு நேற்று, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், 150 ஏக்கர் வனப் பகுதியில் உள்ள காய்ந்த இலைகள், புதர், மரங்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு படையினரும், வன ஊழியர்களும் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி