உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிடி ஆயோக் கூட்டம்: மம்தா வெளிநடப்பு; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

நிடி ஆயோக் கூட்டம்: மம்தா வெளிநடப்பு; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். 5 நிமிடங்கள் கூட என்னை பேச அனுமதிக்கவில்லை என்றார். நிடி ஆயோக் கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? என முதல்வர்

வெளிநடப்பு

பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் அமைப்பின் 9 வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ., மற்றும் அக்கட்சி கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் 8 பேர் புறக்கணித்தனர். மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார். முன்னதாக அவர், கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை எனில் கூட்டத்தை புறக்கணிப்பேன் எனக்கூறியிருந்தார். அதன்படி, இன்று டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டம் கூடியது. சிறிது நேரத்தில் அவர் வெளிநடப்பு செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ceqwj1su&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மைக் அணைப்பு

நிருபர்களிடம் மம்தா கூறியதாவது: கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 20 நிமிடங்கள் பேச அனுமதி வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் 10- 12 நிமிடங்கள் பேசினர். ஆனால், எனக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இது அநியாயம். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். ஆனால் நான் பேச அனுமதிக்கப்படவில்லை.நான் பேச துவங்கிய 5 நிமிடங்களில் எனது மைக் அணைக்கப்பட்டது. நான் பேசுவதை நிறுத்தியது ஏன்? ஏன் இந்த பாகுபாடு கட்டப்படுகிறது எனக்கேட்டேன். இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றதற்கு நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். என்னை பேச அனுமதிக்காதது மேற்கு வங்கத்திற்கு மட்டும் அவமானம் அல்ல. பிராந்திய கட்சிகளுக்கும் அவமானம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

இது தான் கூட்டாட்சியா?

நிடி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வரை பேச அனுமதிக்காதது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிடி ஆயோக் கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?. இதுதான் கூட்டாட்சியா?. எதிர்க்கட்சிகள் நமது ஜனாநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பா.ஜ., அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சியில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு மரியாதை அளிக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரியாக நினைத்து அடக்கி வைக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

sankaranarayanan
ஜூலை 27, 2024 20:42

எந்த இடத்தில் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை முழுவதும் தெரியாமல் நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது அரசியல்பற்றியும் நிதிக்கு சம்பந்தமில்லாது செய்திகளை ஒவ்வொரு மாநில முதல்வர்களும் அங்கே சென்று சொல்ல அது என்ன அரசியல் கட்சி மேடையா தான்என்ன செய்தொம் என்ற தவறை கூறாமல் மறைத்து என்னை பேச அனுமதிக்கவில்லை என்றால் அதற்கு யார் குற்றவாளி என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்


Madhavan
ஜூலை 27, 2024 18:01

ஐயா தமிழக முதல்வர் அவர்களே தாங்கள் அறிவித்ததற்கு மாறாக எம்.ஜி.ஆர். மாதிரி கன்னத்தில் ஒரு மச்சத்தை ஒட்டிக் கொண்டு மாறு வேடத்தில் அந்த நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று மம்தா பானர்ஜி அருகில் அமர்ந்திருந்தீர்களா ஐயா? அங்கே என்ன நடந்தது என்பதை நிதியமைச்சர் விளக்கமாக மீடியாக்களில் தெரிவித்த பின்னரும் தாங்கள் மம்தாவிற்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்? உங்கள் இ.ந்.தி.யா. ஒன்றிய எதிர்க்கட்சி கூட்டணியில் நீங்கள் ஒருவராவது மம்தா பானர்ஜியுடன் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் வேலிக்கு ஓணான் சாட்சியென நம்பியிருப்போம். ராகுல் காந்தி ஆதரவாளர்களே மம்தா பானர்ஜியை நம்பவில்லையே


Rengaraj
ஜூலை 27, 2024 16:33

மாநில முதல்வர்கள் எல்லோரும் அரசியல் கட்சிக்காரர்கள் தான். அரசியல் பேச பாராளுமன்றம் உள்ளது. நீடி ஆயோக் கூட்டம் நிதி ஒதுக்குவது, புது திட்டங்கள் பற்றி பேசுவது, பொருளாதாரம் பற்றி எடுத்துரைப்பது , வரி வசூல் செய்வது இப்படி முழுவதும் நிதி சம்பந்தப்பட்டுதான் இருக்கும். அங்கு போய் தேர்தல் பிரச்சாரம் பண்ணுவது போன்று அரசியல் பேசக்கூடாது. மைக் ஆப் ஆனதால் அவர் பேசியது மாநிலத்துக்காகத்தானா அது சரியா தவறா என்பதை அந்த மாநில நிதிச்செயலரை கேட்டால்தான் தெரியும். என்னத்துக்கு வம்புன்னு அவரும் எதுவும் சொல்ல மாட்டார்


Swaminathan L
ஜூலை 27, 2024 15:27

அந்த ஐந்து நிமிடங்கள் என்ன பேசினேன் என்று விவரித்திருந்தால் மைக் ஆஃப் ஆன் காரணம் எல்லோருக்கும் தெரிய வரும். பாராளூமன்றத்தில் கட்சி மீட்டிங் போல ஆளாளுக்கு தங்கள் கட்சித் தலைமை, கட்சி சித்தாந்தம் பற்றி இடைவெளி ஒரு கணமும் இன்றி பொழிவது வாடிக்கையாகி விட்டது. நிதி ஆயோக் மீட்டிங்கில் இது தரவில்லை, அது வரவில்லை, மாற்றாந்தாய் மனப்பான்மை என்று வெற்று எதிர்ப்பு அரசியல் மட்டும் பேசிக் கொண்டே போனால் மைக் ஆஃப் ஆகத் தான் செய்யும். கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு, கலந்து கொண்டவுடன் புறக்கணிப்பு, கலந்து கொண்டாலும் புறக்கணிப்பு என்று விதவிதமான புறக்கணிப்பு நடப்பதில், இவர்கள் தங்கள் மாநில, தங்கள் மாநில மக்களின் நன்மைகளையல்லவா புறக்கணிக்கிறார்கள்?


முருகன்
ஜூலை 27, 2024 15:20

இந்த முறை மக்கள் எச்சரிக்கை விடுத்தால் தான் மெஜாரிட்டி கிடைக்க வில்லை இப்படி தொடர்ந்து எதிர்க்கட்சிகளை மதிக்க வில்லை என்றால் அடுத்த முறை ஆட்சி அமைப்பது கடினமான இருக்கும்


K.SANTHANAM
ஜூலை 27, 2024 15:19

மம்தா தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை என்று இன்று பொங்கும் ஸ்டாலின் அவர்கள் கடந்த 2012ல் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியிலிருந்த போது அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை என்று வெளிநடப்பு செய்த போது ஏன் பொங்கவில்லை. அப்போது திமுகவைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள் ஏன் அமைதி காத்தனர். இன்றைய முதல்வர் ஸ்டாலின் அப்போது தமிழகத்துல இல்லையா..


R Kay
ஜூலை 27, 2024 15:13

பேச மறுப்பில்லை. தேச விரோத கருத்துக்களையும் சம்பந்தமில்லாத உளறல்களையும் கூறத்தான் அனுமதி மறுப்பு


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 14:53

ரோஹிங்யா சார்பாக கலந்து கொள்ள திட்டம் ?


Kumar Kumzi
ஜூலை 27, 2024 14:48

கள்ளக்குடியேறிஉங்களுக்கு இட ஒதுக்கீடு


Kumar Kumzi
ஜூலை 27, 2024 14:44

இந்த சேசத்துரோகியை உள்ளே அனுமதித்திருக்க கூடாது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை