உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

 கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

சண்டிகர்: கொலை வழக்கில் தேடப்பட்டவர், போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் தூல்கா கிராமத்தில், மளிகைக் கடை நடத்தும் மஞ்சித் சிங், 16ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், ராஜன் என்ற பில்லா என்ற ரவுடியை தேடி வந்தனர். அமிர்தசரஸின் ரய்யா பகுதியில் ராஜன் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார், ரய்யாவில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பைக்கில் ராஜன் சென்றார். வண்டியை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால், பைக்கை வேகமாக செலுத்தி ராஜன் தப்ப முயன்றார். மேலும், போலீசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். போலீஸ் கொடுத்த பதிலடியில், உடலில் குண்டு பாய்ந்த ராஜன், சரிந்து விழுந்தார். உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இந்தச் சண்டையில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ