உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலை விரும்பாத மஞ்சுநாத் மாமனார் தேவகவுடா விளக்கம்

அரசியலை விரும்பாத மஞ்சுநாத் மாமனார் தேவகவுடா விளக்கம்

பெங்களூரு: ''அரசியலுக்கு வருவதில் டாக்டர் மஞ்சுநாத்திற்கு உடன்பாடில்லை,'' என்று, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.பெங்களூரு ஜெயதேவா இதய மருத்துவமனை இயக்குனராக பணியாற்றி, சமீபத்தில் ஓய்வு பெற்றவர் டாக்டர் மஞ்சுநாத். இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன். லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் அல்லது பெங்களூரு வடக்கு தொகுதியில், மஞ்சுநாத்தை போட்டியிட வைக்க, ம.ஜ.த., - பா.ஜ., கட்சிகள் முயற்சி செய்கின்றன. இதுவரை மஞ்சுநாத்திடம் இருந்து, உறுதியான பதில் கிடைக்கவில்லை.இந்நிலையில், பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள, ம.ஜ.த., அலுவலகத்தில் தேவகவுடா நேற்று அளித்த பேட்டி:எனது மருமகன் டாக்டர் மஞ்சுநாத், நாடு முழுவதும் நற்பெயர் எடுத்தவர். இப்போது நல்ல நிலையில் இருக்கிறார். அரசியலுக்கு வருவதில் அவருக்கு உடன்பாடில்லை. அரசியலுக்கு வரும்படி அவரை நான் வற்புறுத்தவும் இல்லை. அவரது ஆளுமைக்கு களங்கம் விளைவிக்கும் எந்த முடிவுக்கும் நான் உடன்பட மாட்டேன்.இன்னும் ஒரு வாரத்தில் பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த.,வுக்கு எத்தனை 'சீட்' என்று, தொகுதி பங்கீடு செய்யப்படும். யார் எங்கு போட்டியிட வேண்டும் என்று அமித்ஷா, நட்டா, குமாரசாமி முடிவு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை