தாவரகெரே வரை மெட்ரோ சேவை; எம்.எல்.ஏ., சோமசேகர் தகவல்
பெங்களூரு; தாவரகெரே வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, அரசு முடிவு செய்து உள்ளதாக, யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரின் ெஹாசஹள்ளியில் இருந்து கடபகெரே வரை 12.50 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துதல், மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. கடபகெரேயில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் உள்ள தாவரகெரே வரையிலும், மெட்ரோ சேவையை நீட்டிக்க அரசு முடிவு செய்து உள்ளது.இந்த மெட்ரோ பாதையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும், மெட்ரோ, மாநகராட்சி அதிகாரிகளுக்கு துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார். ஈரடுக்கு மேம்பாலம் கட்டினால், மாகடி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.யஷ்வந்த்பூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடக்கிறது. இதற்கு நிதி அளித்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.