| ADDED : பிப் 22, 2024 07:06 AM
பெலகாவி,: பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா, லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தலில் பெலகாவி, சிக்கோடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக, பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த, பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில், நேற்று முன்தினம் இரவு கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் பெலகாவி மவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமண் சவதி, விஸ்வாஸ் வைத்யா, ராஜு காகே, மஹாந்தேஷ் கவுஜலகி, அசோக் பட்டன், எம்.எல்.சி.,க்கள் பிரகாஷ் ஹுக்கேரி, சன்னராஜ் ஹட்டிஹோளி மற்றும் பெலகாவி, சிக்கோடி காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பெலகாவி, சிக்கோடியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி குறித்து, ஆலோசிக்கப்பட்டது. சிக்கோடி தொகுதியில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா அல்லது பெலகாவி மாவட்ட குரூபர் சமூக தலைவர் லட்சுமண்ராவ் சிங்கிற்கு, 'சீட்' வழங்கலாம் என, கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.