உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா தேர்தலில் போட்டி வேண்டாம் பா.ஜ.,வை ஆதரிக்க ம.ஜ.த., முடிவு?

ராஜ்யசபா தேர்தலில் போட்டி வேண்டாம் பா.ஜ.,வை ஆதரிக்க ம.ஜ.த., முடிவு?

பெங்களூரு: 'கர்நாடக சட்டசபையில் இருந்து, ராஜ்யசபாவுக்கு நடக்கும் தேர்தலில் போட்டியிட வேண்டாம்,' என, ம.ஜ.த., முடிவு செய்துள்ளது.கர்நாடக சட்டசபையில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரசின் ஹனுமந்தையா, நாசிர் ஹுசேன், சந்திரசேகர்; பா.ஜ.,வின் ராஜிவ் சந்திரசேகர் பதவி காலம், ஏப்ரல் 2ல் முடிவடைகிறது. இவர்களால் காலியாகும் இடங்களுக்கு, பிப்ரவரி 27ல் தேர்தல் நடக்கவுள்ளது.சட்டசபை பலத்தின் அடிப்படையில், காங்கிரஸ் மூன்று, பா.ஜ., ஒரு இடத்தை கைப்பற்றலாம். இதற்கு முன் ஐந்தாவது வேட்பாளரை களமிறக்க, பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி கட்சிகள் திட்டமிட்டன. ம.ஜ.த.,வின் முன்னாள் ராஜ்யசபா எம்.பி., குபேந்திர ரெட்டியை களமிறக்குவதாக கூறப்பட்டது. ஆனால் ம.ஜ.த., தலைவர்கள், ராஜ்யசபா தேர்தலில் ஆர்வம் காண்பிக்கவில்லை. லோக்சபா தேர்தலுக்கு தயாராவதில் ஈடுபட்டுள்ளனர்.சட்டசபையில் ம.ஜ.த., 19 உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ளது. ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாது. எனவே வேட்பாளரை களமிறக்காமல், பா.ஜ., இரண்டாவது வேட்பாளரை களமிறக்கினால், அவருக்கு ஆதரவளிக்க ம.ஜ.த., மேலிடம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை