உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு: ராகுல் கோபம்

பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு: ராகுல் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛நேற்று வெளியானது அனைத்தும் கருத்துக்கணிப்பு அல்ல. பிரதமர் மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு '' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று( ஜூன் 1) நிறைவு பெற்றது. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜூன் 4) வெளியாக உள்ளது. நேற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடக அமைப்புகள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளிலும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ‛இண்டியா ' கூட்டணி 144 இடங்களை பிடிக்கும் என தெரிவித்து உள்ளன.இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. ‛ இண்டியா ' கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

பேசும் தமிழன்
ஜூன் 03, 2024 08:10

பப்பு ... இதே கருத்து கணிப்பு கான் கிராஸ் வெற்றி பெறும் என்று கூறி இருந்தால் .....மோடிக்கு கிடைத்த தோல்வி .... எங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி என்று ....நீட்டி முழக்கி இருப்பாய் .....உண்மை கசக்கதான் செய்யும்.


Balasubramanian
ஜூன் 03, 2024 07:46

கற்பனை கணிப்பு செய்வது என்று வந்து விட்டால் - ராகுல் ஜி இரண்டு தொகுதிகளிலும் தோல்வி என்று அல்லவா கணிக்க வேண்டும்?


S.R
ஜூன் 02, 2024 22:38

அருமையான பதிவு திரு ராகுல் அவர்களே. கற்பனை கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் உங்கள் கனவு , கற்பனையை விட கேலியாக உள்ளதே. 295 இடங்கள் வேண்டும் என்றால் என்ன வென்று தெரியுமா. அதற்கு தேச பக்தி வேண்டும். விவரம் போதாது தம்பி.


A1Suresh
ஜூன் 02, 2024 21:56

கெட்டிகாரன் புளுகு எட்டே நாள் என்பர். பப்புவின் புளுகு இன்னும் இரண்டே நாள்கள் தான்


J.V. Iyer
ஜூன் 02, 2024 19:17

கருத்துக்கணிப்புகளுக்கு பிரதமர் என்ன செய்வார்? நல்லாயிருக்கு கதை. தத்திக்குக் கோவம் வந்தால் பாயை பிராண்டுவாரோ? இன்னும் குழந்தைத்தனமாகத்தான் இருக்கிறார்.


அப்புசாம
ஜூன் 02, 2024 18:42

அரசியலில் முதல் பாடம் எதற்கும் கோபப்படாமல் இருக்கணும். கடுமரம் தேர்தலில் தோற்றாலும் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் என்று பேசுனாரு. அடுத்து என்ன நேர்ந்தாலும் மக்களை இழிவாகப் பேசக்கூடாது. ஒவ்வொரு சமயத்திலும் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அடுத்த தேர்தல் வரை மக்களுடன் தொடர்பில்.இருக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.டில்லியில் தண்ணீர் பஞ்சம். அதற்கு உண்ணாவிரதம், அனைதியாக ஊர்வகம் நடத்தினால் மக்கள் மனதில்.இடம்.பிடிக்கலாம். பட்டாயா கெளம்பிப் போனா ஊத்திக்கும்.


hari
ஜூன் 02, 2024 21:53

பார்ரா.. கோவாலு அறிவுரை சொல்றரே.... நம்ப முடியலே


நரேந்திர பாரதி
ஜூன் 03, 2024 04:05

கட்டுமரத்தின் மிகவும் பிரபலமான "சோற்றால் அடித்த பிண்டங்களை" மறந்து விட்டீரோ?


என்றும் இந்தியன்
ஜூன் 02, 2024 18:34

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யிலே இருக்கும் பொய்யிலே வாழும் பொய்யிலே புரளும் பப்பு


Jai
ஜூன் 02, 2024 18:00

எவ்வளவு காலம் பொய்யில் வாழ முடியும்? நல்ல தலைவர்களுக்கு வழிவிட்டு கட்சியை விட்டு இந்த குடும்பம் விலக வேண்டும்.


theruvasagan
ஜூன் 02, 2024 17:00

அம்பானி அதானின்னு உருட்டினதை தவிர வேற ஏதாவது உருப்படியான அரசியல் செய்துள்ளீர்களா.


Krishna
ஜூன் 02, 2024 16:23

தமிழ் நாட்டு கணிப்பும் கற்பனைதானோ?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை