உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் தடுப்பு சட்டம் மிகவும் அவசியம்: இது முக்கியமான விஷயம் என்கிறார் கிரண் ரிஜிஜூ

ஊழல் தடுப்பு சட்டம் மிகவும் அவசியம்: இது முக்கியமான விஷயம் என்கிறார் கிரண் ரிஜிஜூ

புதுடில்லி: ''ஊழல் தடுப்பு சட்டம் மிகவும் அவசியமானது. ஒவ்வொரு இந்தியருக்கும் இது மிகவும் முக்கியமான விஷயம்'' என பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.பிரதமர், முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் தொடர்ந்து 30 நாட்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யலாம் என கடந்த வாரம் லோக்சபாவில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து, ஆங்கில செய்தி சேனலுக்கு, கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி: கடுமையான வழக்குகளில் 30 நாட்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்ட ஊழல் தலைவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்டம் மிகவும் அவசியமானது. ஊழலுக்கு எதிரான சீர்திருத்தச் சட்டம் இதுவாகும். இது மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டு பார்லிமென்ட் குழுவிற்கும் அனுப்பப்பட்டது. இது ஒரு மிக முக்கியமான சட்டம். இதில் அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுகிறது, இதில் தற்போதைய முதல்வர், மத்திய அமைச்சர் மற்றும் பிரதமர் கூட சட்டத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும். இதன் மூலம், நீங்கள் ஊழல் செய்தால், நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் பதவியையும் விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிக முக்கியமான விஷயம். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

T.sthivinayagam
ஆக 30, 2025 21:48

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கட்சி பணம் வாங்குவதும் ஊழல் தான் கிரண் சார் என்று மக்கள் கூறுகின்றனர்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 17:57

அதை எதிர்கட்சிகளை மிரட்டுவதற்கு மட்டுமே பாஜக பயன்படுத்துகிறதே, ஏன்? பாஜகவிலே சேர்நதால் சட்டம் படுத்து விடுகிறதே, ஏன்?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 17:51

மோடி வாஷிங் மெசினை பற்றி இந்த சட்டம் என்ன சொல்கிறது என்று விரிவாக சொல்லுங்கள்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 17:47

ஆனால் அதை உங்கள் கட்சிக்கு ஆள் சேர்க்க பயன் படுத்தாதீர்கள் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


baala
ஆக 30, 2025 10:41

நீங்கள் ள்ளுவது உண்மை. ஆனால் அதை பழிவாங்க உபயோகப்படுத்த கூடாது மக்களுக்கு நல்லது செய்ய பயன்படுத்த வேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 17:48

பாஜாகாவில் சேர்ந்தால் புனிதர்கள் ஆகிறார்கள் என்பது வரலாறு


V RAMASWAMY
ஆக 30, 2025 10:33

ஊழல் செய்து கருப்பு கருப்பாக கோடிக்கணக்கில் வைத்துள்ள பணத்தை வெள்ளையாக்க பல திட்டங்களை வஞ்சகமாக செய்துள்ள உத்திகளையும் கண்டு தண்டிக்க இந்த சட்டம் வழிவகை செய்யவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை